புளியில் பல்லி - எச்.ராஜாவின் பரபரப்பு குற்றச்சாட்டுகள்

 
ஹ்

பஞ்சாபில் நடந்தது பிரதமருக்கு பாதுகாப்பு குளறுபடி என்று மட்டும் சொல்ல முடியாது.   இது திட்டமிட்ட சதி என்று காங்கிரஸ் தலைவர் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மீது குற்றம்சாட்டினார் பாஜகவின் முன்னாள் தேசிய செய்தி தொடர்பாளர் எச்.  ராஜா. 

 பஞ்சாபில் பிரதமருக்கு பாதுகாப்பு குளறுபடி என்று மட்டும் சொல்ல முடியாது இது திட்டமிட்ட சதி.  காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி செய்த சதி . பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழ்நிலையில் சட்டம்-ஒழுங்கை மாநிலப் பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றுவதற்கான விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன என்று தெரிவித்தார்.

ஹ்ஹ்

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்தாம் தேதி அன்று  பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நடைபெறுவதாக இருந்த கூட்டத்தில் பங்கேற்க சென்றார்.  வானிலை சரியாக இல்லாததால் அவர் தரைவழியாக செல்வது என்று பயணம் மாற்றப்பட்டது.   பிரதமர் மோடியின் வாகனம் ஹூசைனி வாலாவிருந்து 30 கி.மீட்டர் தூரத்தில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பிரதமர் மோடி செல்லும் வாகனம் சுமார் 20 நிமிடங்கள் சாலையிலேயே நகர முடியாமல் நின்றது. இதனையடுத்து பஞ்சாப் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு பிரதமர் மீ்ண்டும் டெல்லி திரும்பினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.   இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் அமைத்திருக்கும் விசாரணைக் குழுக்கள் கலைக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. 

ஹ்ஹ்

 பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால் பல்வேறு கட்ட விசாரணைகள் நடந்து வரும் நிலையில்,  வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் ஆடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  சீக்கியருக்கு நீதி என்ற அமைப்பிலிருந்து இந்த ஆடியோ வந்திருக்கிறது.  பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தில் தடையை ஏற்படுத்தியது நாங்கள் தான்.  அதற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம்.  இந்த விவகாரத்தை விசாரிக்கக் கூடாது என்ற பரபரப்பு ஆடியோ வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறது.   டெல்லியை சேர்ந்த சில மூத்த வழக்கறிஞர்களின் செல்போன்களுக்கு ஐரோப்பிய நாடான பிரிட்டனிலிருந்து சீக்கியருக்கு நீதி என்கிற அமைப்பில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது.  பிரதமரின் பாதுகாப்பு குளறுபடியில் வெளிநாட்டு சதி என்று செய்தி பரவி வரும் நிலையில்,  சோனியாகாந்தியின் சதி என்று எச்.ராஜா குற்றம் சாட்டியிருக்கிறார்.

கரூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் மேலும்,   திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்தும் பொங்கலுக்கு வழங்கப்பட்டு வரும் தமிழக அரசு பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொங்கல் பங்கு குறித்தும் பேசினார்.  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வெள்ள நிவாரணப் பணிகள் மேற்கொள்வதில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது.  இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் திமுக படுதோல்வி அடைவது உறுதி என்றார்.

 பொங்கலுக்கு வழங்கப்பட்டிருக்கும் பொருட்களில் உள்ள புளியில் பல்லி உள்ளது.   பொருட்கள் அனைத்தும் தரமற்ற வகையில் பேக்கிங் செய்யப்பட்டு இருக்கிறது .  இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.