உதயநிதிக்கு விழுந்த இரண்டாவது ஓட்டு

 
u

 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,  உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று முதன் முதலாக கோரிக்கை விடுத்திருந்தார்.  இந்தக் கோரிக்கைக்கு திமுகவின் மற்ற அமைச்சர்கள் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளின் ஆதரவு எப்படி இருக்கிறது என்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டறிந்து வருகின்றனர்.  

திமுகவின் மூத்த நிர்வாகி கே. என். நேருவிடம்  இதுகுறித்து கேட்டபோது,  முதலமைச்சர் என்ன விரும்புகிறாரோ அது நடக்கும் என்று சொல்லியிருக்கிறார். 

mrk

இதையடுத்து மீண்டும் அன்பில் மகேசிடம்,  நீங்க ஆரம்பிச்சு வச்சதுதான்...உதயநிதி அமைச்சர் ஆவாரா? என்ற கேள்விக்கு,  வந்தா நல்லது என்று நினைக்கிறேன் என்றார்.   சட்டமன்ற உறுப்பினராக அந்த பணிகளை அவர் சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார்.  அடுத்து அவர் பெரிய பொறுப்புக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அதைத்தான் நாங்களும் சொல்கிறோம்  என்றார்.  

இந்நிலையில்  வேளாண்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் உதயநிதிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.   தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்ற அவர் காரிமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது,  இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை உண்டு.  கடந்த ஆறு மாத காலமாக உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவை உறுப்பினராக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.  வீடுவீடாக சென்று மக்களை சந்தித்து வருகிறார்.  இளம் வயதிலேயே நல்ல முறையில் பணியாற்றி வருகிறார்.  அவர் அமைச்சர் ஆவதற்கு தகுதியானவர் என்றார்.