பாரதப்பிரதமர் எங்கள் தளபதி மட்டுமே... திமுக நிர்வாகியின் வைரல் போஸ்டர்

 
pa

 அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு திமுகவில் இணைந்த சிறுபான்மை  பிரிவு நிர்வாகி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ஒட்டியிருக்கும் போஸ்டர் திமுகவினரையே மிரள வைத்திருக்கிறது.

stt

 அதிமுகவில் இஸ்லாமியர்களுக்கு மரியாதை இல்லை,  இஸ்லாமியர்களுக்கு எதிராக எடப்பாடிபழனிசாமி துரோகம் இழைக்கிறார் என்று அவர் மீது அடுக்கடுக்கான புகார்களை சொல்லி  அவரை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் அதிமுகவின் சிறுபான்மையினர் நலப் பிரிவு  மாநில துணைச் செயலாளர் ஜே. எம். பஷீர்.

pt

 இதை அடுத்து கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக சொல்லி,  சிறுபான்மையினர் நலப் பிரிவு மாநில துணைச் செயலாளர் பதவியில் இருந்துஅவரை  நீக்கினார்கள் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் .    மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படுவதாக அவர்கள் அறிவிப்பு அறிக்கை வெளியிட்டனர்.

 இதன்பின்னர் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய போது ஓபிஎஸ் காலில் விழுந்து வணங்கி அவரை சந்தித்துப் பேசினார்.   இதனால் அவர் அதிமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப் படுகிறார் என்ற சலசலப்பு கட்சிக்குள் எழுந்தது ஆனால்.

 அவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.    திமுகவில் அவருக்கு சிறுபான்மை உரிமை பிரிவில் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது . இந்தநிலையில் ஜேஎம் பசி ஒட்டியிருக்கும் போஸ்டர் திமுகவினரையே மிரள வைத்திருக்கிறது.  

o


 தமிழக முதல்வராக பதவியேற்றவுடன் என். ஆர். சி.,  சி. ஏ. ஏ. என்ற சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் போட்டு இந்தியா முழுவதும் உள்ள சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்துள்ளார் ஒரே முதல்வர் மற்றும் இனி இந்திய சிறுபான்மை மக்களின் ஒரே பாரதப்பிரதமர் எங்கள் தளபதி மட்டுமே என்று அவர் தெரிவித்திருக்கிறார்.  இந்த போஸ்டரை வைத்து நெட்டிசன்கள் வலைத்தளங்களில் விளையாடி வருகின்றனர்.

 நடிகர் லிவிங்ஸ்டன் நடத்திய நடித்த ஒரு படத்தில்,  வருங்கால ஜனாதிபதி முருகேசன் வாழ்க என்ற கோஷம் ரசிகர்களிடையே மிகப் பிரபலம்.  அதேபோல் பஷீரும்,   சிறுபான்மை மக்களின் ஒரே பாரதப்பிரதமர் எங்கள் தளபதி மட்டுமே என்று கூறியிருப்பதால் கமெண்ட் அடித்து வருகின்றனர்.