திமுக அரசின் முயற்சியை மக்கள் சக்தியும், நீதிமன்றங்களும் முறியடிக்கும் - பாஜக

 
tt

பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் என்று கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்று குறிப்பிட்டிருக்கும் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,   தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக 'கல்வியை' வர்த்தகமாக்கிய நிலையில், பல்கலைக்கழகங்கள் ஊழலின் இருப்பிடமாக தான் இருந்து  வருகின்றன என்கிறார்.

அவர் மேலும் இதுகுறித்து,   கடந்த ஏழு வருடங்களுக்கு முன் நியமிக்கப்பட்ட  பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்களாக இருந்த பலர் ஊழல் குற்றச்சாட்டுகளில் ஜெயிலிலோ அல்லது பெயிலிலோ தான் உள்ளனர் என்பது வெட்கக்கேடு என்கிறார். 

r

இரு நாட்களுக்கு முன் கூட சென்னை உயர்நீதி மன்றம்  பல்கலைக்கழகங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து தன் கடும் கண்டனத்தை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. நியமனங்களில் லஞ்சம், கொள்முதல்களில் ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கொள்ளையடித்து கல்வியை ஊழல் மயமாக்கிய பெருமை தமிழகத்திற்கே அதிகம் என்கிறார். 

2014 க்கு பிறகு கடந்த ஏழு  வருடங்களாக தான் தகுதியின் அடிப்படையில் முறையானவர்கள் துணைவேந்தர்களாக ஆளுநரால் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால்,  மொழி ரீதியாக, மாநில உரிமைகல் என்று ரீதியாக உணர்வுகளை தூண்டி விட்டு அந்த நியமனங்களை தடுத்து நிறுத்தும் முயற்சியில் திமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வந்தன. பணம் காய்ச்சி மரமாக விளங்கி கொண்டிருந்த பல்கலைக்கழகங்களில் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு முட்டு கட்டை போடப்பட்டிருப்பதை உணர்ந்த திமுக அரசு இந்த பணி நியமனங்களை தங்களின் அதிகாரத்தில்  கொண்டு வர துடிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று சொல்லும் நாராயணன்,

நாளைய தலைமுறையை உருவாக்கும் பல்கலைக்கழங்கங்களை முறைகேடுகளின் மொத்த உருவமாக மாற்றி ஊழல் மயமாக்க துடிக்கிறது திமுக அரசு. மக்கள் சக்தியும், நீதிமன்றங்களும் இந்த முயற்சியை முறியடிக்கும் என்கிறார்.