கொடியோடு கட்சியும் வீழ்ந்தது..சோனியா அப்செட் -வைரலாகும் வீடியோ

 
c

காங்கிரஸ் கட்சியின் 137வது ஆண்டை முன்னிட்டு நாடு முழுவதும் காங்கிரஸார் கொண்டாடி வருகின்றனர்.  ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு வருகிறது. 

 டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் 137வது ஆண்டு கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.  இன்று காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பங்கேற்று கொடியை ஏற்ற சென்றார்.


 கொடிக்கம்பத்தில் தயாராக வைக்கப்பட்டிருந்த கட்சி கொடியை ஏற்றி வைக்க முயன்றார்.  அப்போது எதிர்பாராதவிதமாக  அந்தக் கொடியை ஏற்றி வைக்க முடியவில்லை.   அருகில் இருந்தவர் அந்த கொடியை ஏற்ற முயற்சி  செய்தார்.  அப்போது கொடி கீழே விழுந்துவிட்டது.

 மேலே ஏற்ற முடிந்த கொடி கீழே கைகளில் விழுந்து கிடந்ததை பார்த்து சோனியா அப்படியே அதிர்ச்சியில் நெடுநேரம் நின்றிருந்தார். சோனியாகாந்தி கொடியை ஏற்றும் போது அது கீழே விழுந்தால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது எல்லோருமே அசைவற்று நின்று இருந்தனர்.

   இதையடுஇத்து காங்கிரஸ் தொண்டர்கள் அங்கே விரைந்து சென்று கொடியை சரி செய்தனர்.  பின்னர் வழக்கம்போல நிகழ்ச்சிகள் தொடங்கின.   இந்த வீடியோ இணைய சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 இதற்கு தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,  ‘’கொடியோடு கட்சியும் வீழ்ந்தது’’என்ற கமெண்ட் அடித்திருக்கிறார்.