திமுக வலைத்தளவாசிகளின் கைகளை கட்டிய தலைமை
தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக எதுவும் பதிவிட வேண்டாம், குறிப்பாக #GoBackmodi என்ற ஹேஷ்டேக்கினை டிரெண்ட் செய்ய வேண்டாம் என்று திமுக தலைமை கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கிறது என்று தகவல். பிரதமர் மோடி விஷயத்தில் திமுக அடித்த இந்த அந்தர் பல்டி நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் அவருக்கு எதிராக திமுகவினர் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கி வருவார்கள். ஹேஷ்டேக், மீம்ஸ் போட்டு மோடியின் வருகைக்கு கடும் தெரிவித்து வருவார்கள். இதனால் மோடி வரும்போதெல்லாம் பலூன் விட்டு விளையாடுவதா? என்று பாஜகவினர் கொதித்தெழுந்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பதினோரு மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக ஜனவரி 12ஆம் தேதியன்று மதுரை வருகிறார் பிரதமர் மோடி. இதனால் இந்த முறையும் திமுகவினர் மோடிக்கு எதிராக #GoBackmodi கருப்புக்கொடி காட்டிவிடும் சூழல் இருந்தது. ஆனால், பிரதமர் மோடியை எதிர்க்க தேவையில்லை. அவர் பகையாளி அல்ல விருந்தாளி என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளரே சொல்லி இருப்பதால், திமுக சமூக வலைத்தள வாசிகளுக்கு, திமுக தலைமை அறிவுத்தி இருக்கிறது என்பது உறுதியாகிறது.
இந்த முறை பிரதமர் மோடிக்கு திமுக கருப்பு கொடி காட்டாமல், அவருக்கு பூமழை தூவி வரவேற்கவே நினைப்பது, திமுகவின் இந்த அந்தர் பல்டி நெட்டிசன்களால் கடுமையாக விமரசனம் செய்யப்பட்டு வருகிறது.


