அதிமுக தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம்
அதிமுக தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக முன்னாள் எம்.பி. கே. சி .பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரித்தது உச்சநீதிமன்றம். ஆனால் அதிமுக தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
அதிமுகவில் கடந்த 1ஆம் தேதியன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளரை பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பதிலாக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்தார்கள் என திருத்தம் செய்யப்பட்டது போல் இருவரையும் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் மூலம் இணைந்தே தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து வரும் 7ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இன்றும் நாளையும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் இருந்தது. ஓபிஎஸ்- இபிஎஸ் இருவருமே நாளை தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.
இதை எதிர்த்து கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் எந்த இடைநீக்கம் செய்யப் படாமல் தொடரும் உறுப்பினர்கள் யாரும் இருவர் ஒரே ஒரு மனுவாக தாக்கல் செய்து அது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டால் வரும் 7ஆம் தேதி அடிப்படை உறுப்பினர்கள் வாக்கு செலுத்தும் நடைமுறை இருக்கும் இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிட வேண்டும் என்றால் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒருவர் அதேபோல இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒருவர் என இருவர் சேர்ந்து ஒரே மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்.
கடந்த காலங்களில் பொதுச்செயலாளர் எப்படி ஒற்றை வாக்கின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அதேபோல குறைவாக அடிப்படையில் தற்போது உள்ள ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரையும் எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாமல் இருந்தால் அல்லது தாக்கல் செய்து அது நிராகரிக்கப்பட்ட அல்லது தாக்கல் செய்துவிட்டு பின்னர் வாபஸ் பெற்றுக் கொண்டாலும் வாக்கெடுப்பு நடத்தாமல் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப் படுவதாக அறிவிக்கப் படுவர்.


