கோட்டையே நடுங்க வேண்டும் -கூட்டத்தை திரட்டும் எஸ்.பி.வேலுமணி

 
ச்ப்

 போலீஸ் வழக்குப் போட்டால் அதற்கு எதிர்வினையாற்ற தயார் என்று சொல்லி கோவை போலீசை எச்சரித்தார் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ். பி. வேலுமணி.

 கோவையில் நடந்த அதிமுக மாவட்ட செயல்வீரர் கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ். பி. வேலுமணி கலந்து கொண்டு பேசினார்.   அப்போது அவர் ஏழு மாத ஆட்சியில் மக்களுக்கு எந்த திட்டமும் செய்யாத திமுக அரசை கண்டித்து வரும் 9-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.    அதிமுக ஆட்சியில் போட்ட 300 சாலை ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டனர்.  இதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  தமிழகத்திலேயே மிகப் பெரிய  கூட்டமாக இருக்க வேண்டும்.  கூட்டத்தை பார்த்து கோட்டையே நடுங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ச்ப்

ஆர்ப்பாட்டத்திற்கு ஒவ்வொரு டிவிஷனில் இருந்தும் 200 பேர் அழைத்து வரவேண்டும்.  லட்சம் பேர் திரண்டு கோவையில் நடக்கும் போராட்டம் தான் ஓய் நிறுத்தப்பட்ட திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.  ஆட்களை அழைத்து வருவது கண்காணிப்பு குழுக்கள் அமைத்து இருக்கிறோம்  என்றும் அவர் தெரிவித்தார்.

 திமுக ஆட்சிக்கு வந்து ஏழு மாதத்தில் எதுவும் செய்யவில்லை.   விளம்பரத்தில் மட்டும் இந்த ஆட்சி ஓடுகின்றது என்று சொன்னவர்,   இப்போது மண் லாரி, மணல் லாரி , கிராவல் ஓட்ட முடியாத நிலை இருக்கிறது . ஆனால் தமிழக முதல்வர் அனைத்திற்கும் எங்கள் மீது பழி போடுகிறார்.

 கடந்த 10 ஆண்டுகளாக காவல்துறை எப்படி இருந்தது.  இப்போது அதிமுக மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜூனன் மீது வழக்குப் பதிவு செய்திருக்கின்றார்கள். தமிழக முதல்வர் வரும்போது கூடிய கூட்டத்திற்கு காவல்துறை வழக்கு போட்டதா? என்று கேள்வி எழுப்பினார்.

 கோவை போலீசார் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.  காலங்காலமாக இந்த அலுவலகம் மீட்டிங் நடக்கும் போது கூட்டம் இருக்கும்.  அப்புறம் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் வந்து போராட வேண்டிய  நிலைமையை போலீசார் ஏற்படுத்தக்கூடாது.   காவல்துறை வழக்குப் போட்டால் எதிர்வினையாற்ற தயார் என்ற எச்சரிக்கையை காவல்துறைக்கு எச்சரித்தார்.