திட்டமிட்டபடி 5 மாநில தேர்தல் ... தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு

 
எ

 உத்தரப் பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப்,, உத்தரகாண்ட் கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் வரும் பிப்ரவரி ,மார்ச் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருந்த நிலையில் ஒமைக்ரான் வந்ததால் தேர்தல் தள்ளிப்போகிறதா என்ற கேள்வி எழுந்தது.   இந்த நிலையில் இந்த ஐந்து மாநில தேர்தல் குறித்து  மத்திய சுகாதாரத்துறை செயலாளர் உடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. ஆலோசனைக்குப் பின்னர் திட்டமிட்டபடி தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது என தகவல் வெளியாகியிருக்கிறது.

 5 மாநில தேர்தலில் பணியாற்ற இருக்கும் அரசு பணியாளர்களுக்கு தேவையான தடுப்பூசிகள் இருக்கிறதா என்று ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி சுகாதாரத் துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.

ஏ

 மத்திய சுகாதாரத்துறை மற்றும் உத்தர பிரதேசத்தில் தேர்தல் ஆணையர்களின் 3 நாள் சுற்றுப் பயணத்தில் பெறப்படும் கலவரம் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் கூடுதல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் உறுதி செய்திருக்கிறார்கள் .  சுகாதார செயலாளரால் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட தகவலின்படி  கோவா மற்றும் உத்தரகாண்டில் நூறு சதவிகிதம் முதல் தவணை தடுப்பூசி போடப்படுகிறது என்றும், ,   உத்தர பிரதேசத்தில் 85 சதவிகிதம்  என்றும்,  மணிப்பூரில் 70 சதவிகிதம்  என்றும்,  பஞ்சாபில் 79 சதவிகிதம் முதல் தவணை தடுப்பூசி போடப் பட்டிருக்கிறது என்றும் தெரியவந்திருக்கிறது.

 தேர்தல் நடைபெறவிருக்கும் இந்த ஐந்து மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு குறைவாக உள்ளதாகவும் சுகாதார செயலாளர் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருக்கிறார்.   மோசமான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்த வில்லை ஒமைக்ரான்.  அதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து வருவதாகவும் தேர்தல் ஆணையத்திடம் சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

 இதை எல்லாம் வைத்து,  5 மாநிலத் தேர்தலை தள்ளி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிற முடிவுக்கு வந்திருக்கிறது தேர்தல் ஆணையம் என்று தகவல். அதேநேரம் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும்  தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருக்கிறது என்றும் தகவல்.