குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும் - ஜெயலலிதா உதவியாளர்

 
j

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம்  உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன் சங்கரலிங்கம்.    ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தாலும் அவ்வப்போது அரசியல் குறித்தும் தனது அனுபவங்கள் குறித்தும் அவர் சொல்லும் கருத்துக்கள் தமிழக அரசியலில் குறிப்பாக அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன.

p

 இந்த நிலையில் அவர், ’’குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும்.  குழி பறிக்க அல்ல.  அடுத்தவர் பறிக்கும் குழியில் விழாமல் இருக்க..’’  என்று தெரிவித்திருக்கிறார்.

அதற்கு,  ‘’நிச்சயம் உங்கள் அனுபவம் ஆயிரம் அர்த்தங்களை உடையது நரித்தனம் இல்லை என்றால் ஏமாளியாக வேண்டியது தான் சகோதரரே ஆனால் என்றும் உண்மைக்கும் பொறுமைக்கும் ஆயுள் அதிகம் நரியின் சாயம் விறைவாக வெளுத்துவிடும் சகோதரரே’’, ’’போட்டிபோட்டு ஜெய்க்கணும்னு நினைப்பவங்களுக்கோ, வாழ்க்கையில் வளரணும்னு எண்ணம் கொண்டவங்க தங்களை தற்காத்துக்கொள்ள இந்த எண்ணம் வேணும்தான். இல்லைன்னா.... வாழவே விடமாட்டங்கதான்.  சித்தம்போக்கு சிவன்போக்குன்னு போறவங்களுக்கு எதுவும் வேணாம். எல்லாம் அவன் செயல்னு போய்டுவாங்க’’ என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.