செய்துவிட்டு செத்துமடி’ன்னு சொன்ன முதல்வர்! மக்கள் வாழ்வதற்கு வாழ் என்று சொல்லும் பாஜக
செய்துவிட்டு செத்துமடி என்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், மக்களை காப்பாற்ற வாழ்ந்து செய்வதே நல்ல தலைவனுக்கு அழகு என்கிறார் பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி.
அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14வது மாநில மாநாட்டில் பங்கேற்று பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம். அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கம் இல்லை என்பதை சொல்வதற்காகத் தான் நான் வந்திருக்கிறேன் என்றார்.
அவர் மேலும் பேசியபோது, நான் எப்போதுமே அதிகம் பேசமாட்டேன். செயலில் நம்முடைய திறமையை காட்ட வேண்டும். ஒரு அடுக்கு மொழி உண்டு பேச்சை குறைத்து நம்முடைய திறமையை காட்டிட வேண்டும். ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு Do or die அதாவது செய் அல்லது செத்துமடி. ஆனால் அதைக்கூட வார்த்தையை கொஞ்சம் திருத்தம் செய்து சொல்ல வேண்டும் என்று சொன்னால், என்னை பொறுத்தவரையில், இந்த Do-வுக்கும் Die-க்கும் இடையே உள்ள orஎன்ற வார்த்தையை நீக்கிவிட்டு and போட்டு Do and Die செய்து முடித்து விட்டு தான் சாகவேண்டும் என்ற உணர்வோடு நான் என்னுடைய கடமையை ஆற்றி கொண்டிருக்கிறேன் என்பதை துவக்கத்திலேயே சொல்லிக் கொள்ள வேண்டுகிறேன் என்றார்.
முதல்வரின் இந்த ‘’செய்துவிட்டு செத்துமடி’’என்ற பேச்சுக்கு, தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன், ‘’என்னை பொறுத்தவரை live and let live என்பதே நல்ல தலைவனுக்கு அழகு. ‘மக்கள் வாழ்வதற்கு வாழ்’ என்பதே ஒரு சிறந்த தலைவனை உருவாக்கும்.’’ என்கிறார்.