எடப்பாடிக்கு வாழ்த்து சொல்ல வந்தவரை அடித்து உதைத்து விரட்டிய அதிமுகவினர்

 
df

 அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு நேற்றும் இன்றைய தினமும் வேட்புமனுத்தாக்கல் என்பதால் அதிமுகவினர் தலைமை அலுவலகத்தின் முன்பாக திரண்டு நிற்கிறார்கள். ஒருங்கிணைப்பாளர் -இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் என்பதால் நேற்றைய தினம்  சென்னை ஓட்டேரியை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஓம்பொடி பிரசாத் என்பவர் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் சென்றிருந்தார். ஆனால்,  அவரை அதிமுகவினர் அடித்து உதைத்து விரட்டியடித்து விட்டார்கள்.

 இதையடுத்து அவர் ராயப்பேட்டை போலீசில் புகார் அளித்திருக்கிறார்.  இந்த நிலையில் இன்றைக்கும் ஒருவர் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்து விட்டதாகச் செய்தி பரவ அதிமுகவினர் அவரை அடித்து விரட்டினர் . ஆனால் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய வரவில்லை . வேட்புமனு தாக்கல் செய்ய வரும் எடப்பாடி பழனிச்சாமி- ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வாழ்த்து சொல்லத்தான் வந்தேன் என்று சொல்லி இருக்கிறார்.

dsa

 இன்றைய தினம் வேட்புமனுத் தாக்கலின் போது அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தியின் ஆதரவாளர் என்று நினைத்து  அவருக்காக வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருக்கிறார் என்று நினைத்து வடசென்னை வடக்கு மாவட்டம் தொழிற் சங்க துணைச் செயலாளர் விஜயகுமார் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியிருக்கிகிறார்கள்.

 அவரை அடித்து விரட்டி விரட்டி சென்றதல் அங்கு பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.   இதன் பின்னர் விஜயகுமாரை போலீசார் பாதுகாப்பாக அருகிலிருந்த திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.  இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  வடசென்னை மாவட்டச் செயலாளரான ராஜேஷ்  தான் இப்படிச் செய்திருக்கிறார். பெங்களூர் புகழேந்திக்கு ஆதரவாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருப்பதாகக் கட்சியினர் மத்தியில் தவறான தகவலை பரப்பி விட்டார். அதனை நம்பிய தொண்டர்கள் என் மீது தாக்குதல் நடத்தி விட்டார்கள்.  நான் உண்மையில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் வாழ்த்து சொல்லத்தான் வந்தேன்.

 தவறாக திசை திருப்பிவிட்டு தாக்குதல் நடத்திய ராஜேஷ் மீது போலீசில் புகார் அளிப்பேன்.  சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க கட்சி தலைமையகத்தில் புகார் அளிப்பேன்.  அவரை மாற்ற வேண்டும் என்று நாங்கள் இதே அதிமுக தலைமையில் வாசலில் நின்று போராட்டம் நடத்தினோம்.  அதையெல்லாம் மனதில் வைத்துதான் என்னை பழிவாங்கி விட்டார் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.