எடப்பாடிக்கு வந்த அந்த போன் கால் - அன்வர்ராஜா திடீர் நீக்கத்தின் பின்னணி

 
e

அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடந்து முடிந்துள்ளது.  செயற்குழு இன்று நடைபெற இருந்த நிலையில் இக்கூட்டத்தில் பங்கேற்க இருந்த  அக்கட்சியின் மூத்த நிர்வாகி அன்வர் ராஜா நேற்று இரவே திடீரென்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.  

 கடந்த 24ம் தேதி நடந்த மா.செ.க்கள்  கூட்டத்தில் அவர் பங்கேற்றிருந்த நிலையில் இன்றைய தினம் நடைபெற நடைபெற்ற செயற்குழுவில் அவர் பங்கேற்பதாக இருந்த நிலையில் அவர் ஏன் நேற்று இரவே திடீரென நீக்கப்பட்டார்?

wr

 சசிகலாவை அதிமுகவிற்கு கொண்டுவரவேண்டும் என்றும்,  ஓ. பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருக்கிறது என்றும் வெளிப்படையாக பேசியதால் கட்சித் தலைமை கடும் கோபத்தில் இருந்தது.    இதுகுறித்து அன்வர்ராஜா ஒருவரிடம் பேசியபோது,  எடப்பாடி பழனிச்சாமி ரொம்ப கோபத்தில் இருக்கிறார்.  உங்களை அடிக்க ஆள் அனுப்பி இருக்கிறார் என்று சொல்ல,  அதை நம்பிய அன்வர்ராஜா,  எடப்பாடி பழனிச்சாமி தன்னை எம்ஜிஆர்  என்று நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று ஒருமையில் பேச,  தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியை ஒருமையில் பேசியது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

 கடந்த 24 ஆம் தேதி அன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது பூதாகரமாக வெடித்தது.   சிவி சண்முகம் அடிக்கும் அளவிற்கு விவகாரம் பெரிதானது.  நடந்த சம்பவத்திற்கு என்னிடம் விளக்கம் கொடுத்துவிட்டார் அன்வர்ராஜா என்று எடப்பாடி பழனிச்சாமி எழுந்து பேசினாலும்,  அவரது ஆதரவாளர்கள் கொந்தளிக்க பின்னர் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்,   தான் பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார் அன்வர்ராஜா.

 அதன் பின்னர் ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டி கொடுத்த ராஜா,    அதிமுகவில் தன்னை தவிர எல்லாரும் சசிகலா காலில்  விழுந்தவர்கள்தான்.  எல்லாருக்கும் அவர்தான் சின்னம்மா.  அவரை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.  அவர் வந்தால்தான் அதிமுகவுக்கு வெற்றி என்றெல்லாம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் கொந்தளித்தனர்.  

p

இதன்பின்னர்தான்,  அன்வர்ராஜாவை நீக்குவதற்கு ஏன் தயக்கம் காட்டுகிறீர்கள் அவரை கட்சியை விட்டு நீக்கவில்லை என்றால் நாங்கள் வேறு மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று ஓ. பன்னீர்செல்வம் -எடப்பாடி பழனிச்சாமிக்கு மூத்த நிர்வாகிகள் பலரும் மிரட்டல் தொணியில் பேச,  அது குறித்து அவர்கள் இருவரும் ஆலோசனை ஈடுபட்டிருக்கின்றனர்.

 இந்த நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்னொரு போன் கால் வந்திருக்கிறது.   கடந்த 24 ஆம் தேதி அன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கட்சியின் வழிகாட்டு குழுவின் உறுப்பினர் மாணிக்கம்,  கூட்டத்தில் பங்கேற்கவில்லை.  ஆனால் அவர் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஒருவர் பாஜகவில் இணைந்தது கட்சிக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது.   மாணிக்கம் செய்ததைப் போன்றே அன்வர்ராஜாவும் செய்யவிருக்கிறார். 

 செயற்குழுவில் அன்வர்ராஜா   பங்கேற்பார்.  அதனால் பிரச்சினைகள் வெடிக்கும் என்று நீங்கள் நினைத்துக் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.  ஆனால் அன்வர்ராஜா செயற்குழு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள இருக்கிறார் என்று அந்த நபர் சொல்ல,  இதை கேட்டதும் திடுக்கிட்ட எடப்பாடி பழனிச்சாமி,  உடனடியாக பன்னீர்செல்வத்துக்கு விஷயத்தைச் சொல்ல,  இதன் பின்னர்தான் அன்வர்ராஜா திடீரென்று இரவோடிரவாக கட்சியை விட்டு நீக்கப் பட்டு இருக்கிறார் என்று தகவல்.