அமித்ஷா வீட்டு வாசலில் தடுத்து நிறுத்தப்பட்ட தமிழக எம்.பிக்கள்

 
am

 அமித்ஷாவை சந்திக்க நேரம் கொடுக்காததால் காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்த தமிழக எம்பிக்கள் அமித்ஷா வீட்டுக்கே சென்று இருக்கிறார்கள்.  ஆனால் நுழைவு வாயிலிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

 தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அதற்கான கோரிக்கை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்து வழங்குவதற்காக திமுக மக்களவை குழு நேற்று முன்தினம் டெல்லி சென்றது.  

tr

 டி .ஆர் .பாலு தலைமையில் அனைத்து கட்சி தமிழக எம்பிக்கள் இந்த குழுவில் பங்கேற்றிருந்தனர்.  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் செல்வராஜ் , காங்கிரஸ் ஜெயக்குமார்,  அதிமுக நவநீதகிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக நேற்று முன்தினம் இக்குழுவினரால் குடியரசுத் தலைவரை சந்திக்க முடியவில்லை.  அதனால் தங்கள் கோரிக்கை மனுக்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள குடியரசு தலைவரின் செயலாளரிடம்  கொடுத்துவிட்டனர்.

 நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதாக இருந்தது.  ஆனால் தமிழக எம்.பிக்களை சந்திக்க நேரம் கொடுக்கவில்லை.  அமித்ஷாவிடம் இருந்து அழைப்பு வரும் என்று தமிழக எம்பிக்கள்  காத்திருந்து காத்திருந்து ஒரு சிலர் அமித்ஷா வீட்டுக்கு சென்று இருக்கிறார்கள்.  ஆனால் நுழைவாயிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்று தகவல்.