சுப்ரியா சுலே முதல்வர் - ஆதித்யா துணை முதல்வர் : பவாரின் பலே திட்டம்

 
p

மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்தார்.  இதனால் அவர் கடந்த 10ஆம் தேதி மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  12ஆம் தேதியன்று அவருக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின்னர் மருத்துவமனையிலேயே தங்கி இருந்து வந்தார்.  22 நாட்களுக்குப் பின்னர் மருத்துவமனையிலிருந்து அவர் வீடு திரும்பியிருக்கிறார்.

s

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உத்தவ் தாக்கரே டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்து விட்டாலும் அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெற வேண்டும் என்கிறார்கள். சிவசேனாவை சேர்ந்த முதல்வர் வெளிநாட்டில் சிகிச்சை எடுத்துக் கொள்ள செல்லவிருக்கும் நிலையில் மகாராஷ்டிரா அரசியலில் ஒரு பரபரப்பான தகவல் உலவிக் கொண்டிருக்கிறது.

p

 காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆளும் கூட்டணியில் இருக்கின்றன.  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மகள் சுப்ரியா சுலே லோக்சபா எம்பியாக இருந்து இருக்கிறார்.  அவரை மகாராஷ்டிரா முதல்வர் பதவியில் அமரவைக்க சரத்பவார் காய்களை நகர்த்தி வருகிறார் என்றும்,  உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யாவை  துணை முதல்வர் ஆக்க திட்டமிட்டு வருகிறார் என்றும் பரபரப்பு தகவல்கள் பரவி வருகின்றன.