தளபதிக்கு ஏற்ற போர்வாள்

 
sம்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிகர் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இப்படம் சம்பந்தமாக அவர் லண்டன் சென்று விட்டு கடந்த 23ஆம் தேதியன்று சென்னை திரும்பினார். 

 சென்னை திரும்பிய வடிவேலுவுக்கும் அப்படத்தின் இயக்குனர் சுராஜ்க்கும்  ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது .  இதையடுத்து வடிவேலு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .  பின்னர் அவர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியிருக்கிறார்.   அவரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தது குறித்து அவர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

வ்வ்

 எப்படி இருக்கீங்க வடிவேலு,  காய்ச்சல் ஏதும் இருக்கா? பயப்படாதீங்க. தைரியமாக இருங்க. மக்கள் நல்வாழ்வுத் துறையின் நேரடி பார்வையில் இருப்பீங்க .மக்களோட சொத்தை நீங்க . அறிகுறி ஏதும் இருந்தால் உடனே மருத்துவரிடம் சொல்லிருங்க என்று வடிவேலுவிடம்  தெரிவித்திருக்கிறார்.  இதனால் நெகிழ்ந்து போன வடிவேலு கோடிக்கணக்கான  மக்களுக்கான முதலமைச்சரே என்னை தொடர்பு கொண்டு பேசியது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது . அவர் நீடூழி வாழ்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்து வாழவைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

 முதலமைச்சரை தொடர்ந்து  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் தன்னை அழைத்து நலம் விசாரித்ததையும் குறிப்பிட்டிருக்கிறார். முதலமைச்சருக்கு ஏற்ற அருமையான போர்வாள் அமைச்சர் சுப்பிரமணியம்.   இப்படி முதலமைச்சரும் அமைச்சரும் எல்லாரும் தைரியம் கொடுத்ததால்தான் எனக்கும் தைரியம் கூடியது என்று தெரிவித்திருக்கிறார்.