முதல்வர் ஸ்டாலின் சூப்பர்! அண்ணாமலைதான் எதிர்க்கட்சி தலைவர்! ‘ஜெ.’, உதவியாளர் தடாலடி

 
எப்

ஜெயலலிதா இருந்தபோது போயஸ் கார்டனில் செல்வாக்கு மிகுந்தவராக இருந்தவர் பூங்குன்றன்.  அங்கே சகலமும் ஆக இருந்தவர் அவர்தான்.  ஜெயலலிதாவை கட்சியின் மூத்த நிர்வாகிகளே பூங்குன்றன் சொல்லி அவர் மூலமாக அனுமதி பெற்று தான் ஜெயலலிதாவை சந்தித்து வந்தனர்.  அந்த அளவுக்கு பூங்குன்றனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்தார் ஜெயலலிதா.  ஆனால் அவர் மறைந்த பின்னர்,  அவர் மறைந்த பின்னர் கூட இல்லை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போதே பூங்குன்றனுக்கு உரிய முக்கியத்துவம் குறைந்து விட்டது.  கட்சியினர் அவரை கடாசி விட்டனர்.

ப்

 ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் பூங்குன்றன் என்ற பெயரே தெரியாமல் இருந்தது.   அதன் பின்னர் சமூக வலைத்தளங்கள் மூலமாக அவ்வப்போது தனது எண்ணங்களை பதிவிட்டு வந்தார்.   ஜெயலிதாவின் மறைவுக்குப் பின்னர் தான் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டு கோவில் கோவிலாக சென்று வருவதன் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார் பூங்குன்றன்.

 கட்சியில் தனக்கு பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தவர் அது கிடைக்காமல் போகவே சில காலங்கள் அதிருப்தியில் இருந்து வந்தார்.  அதன் பின்னர் அவ்வப்போது அதிமுகவில் உட்கட்சி பூசல் எழும்போது அவர்கள் ஒற்றுமையுடன் இருக்க வலியுறுத்தி தனது கருத்தை பதிவிட்டு வந்தார்.  

ப்ப்

 நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர்,  அதிமுக தோல்விக்கு காரணம் என்று  எடப்பாடி பழனிச்சாமியை மறைமுகமாக அவர் விமர்சித்து வந்தார். அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை அவர் உயர்த்திப் பேசி வந்தார்.    சசிகலா- ஓ. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி மூன்று பேரும் இணைந்து கட்சியை தொடர்ந்து வழிநடத்த வேண்டும்,  கட்சியை நிலைநாட்ட வேண்டும் என்றும்  கூட அவர் கருத்துகளை பதிவிட்டு வந்தார்.

 இந்நிலையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆட்சியை பாராட்டியிருக்கிறார்.   எதிர்க்கட்சியாக  அதிமுக இருந்தும் தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் பாஜகதான் எதிர்க்கட்சி என்கிற ரீதியில் அண்ணாமலை செயல்பட்டு கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.   அதற்காக அண்ணாமலையை பாராட்டவும் செய்திருக்கிறார்.   எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கட்டிக்காத்த அதிமுகவை மீண்டும் காப்பாற்ற வேண்டுமென்று  சொல்லி வந்தவர் அண்ணாமலையையும் முதல்வர் ஸ்டாலினையும் அவர் உயர்த்தி பிடித்து இருப்பது சரிதான் என்றே அதிமுகவினர் பலரும் கருத்து சொல்லி வருகின்றனர்.

ர்ர்

’’அண்ணா மலை, அண்ணாந்து பார்க்கின்ற மலை, அதைப் போலவே இன்று இந்த அண்ணா மலையையும் உயர்ந்து நிற்கிறார். தமிழகத்தில் எதிர்க்கட்சி யார்? என்று தெரியாத அளவிற்கு தனது தைரியமான பேச்சால் வளர்ந்தும், தான் சார்ந்த கட்சியை வளர்த்தும் வருகிறார். அண்ணாமலை அவர்களின் பேச்சு தொண்டர்களிடம் புதிய எழுச்சியையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும் என்பதில் துளி அளவும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை. தமிழகத்தில் அரசியலுக்கு வரும் புதியவர்களை பிரதமரின் ஆளுமையும், அண்ணாமலையின் தன்னம்பிக்கையும் ஈர்க்கும் என்பதே சத்தியம். காதலித்த பணியை கைவிட்டு, மக்கள் பணியை காதலிக்கத் தொடங்கியிருக்கும் திரு அண்ணா மலைக்கு எனது பாராட்டுக்கள்’’ என்று முகநூலில் தெரிவித்துள்ள பூங்குன்றன், 

’’அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் தலைமையிடம் இன்று எதிர்பார்ப்பது புரட்சித்தலைவரின் சாதுர்யத்தையும், புரட்சித்தலைவியின் வீரத்தையும் தான். எதிர்க்கட்சி எப்படி இருக்க வேண்டுமென்றால் தவறுகளை தயங்காமல் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் ஆளும் கட்சிக்கும் மக்கள் பணியில் ஆசைவரும், நல்லதை செய்வதில் கவனம் வரும், போட்டிபோட்டு செய்ய உற்சாகம் பிறக்கும். இன்று எதிர்க்கட்சியில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சென்னையில் மழை வெள்ளத்தில் சென்று உதவிகளை செய்து வருகிறார்கள். மகிழ்ச்சி. தலைவர்களின் வழியில் நிர்வாகிகளும் செயல்பட வேண்டுமல்லவா? ஆனால் வருகின்ற தகவல் மனக்கசப்பைத் தருகிறது. திமுக நிர்வாகிகளிடம் இருக்கும் உற்சாகம் அதிமுக நிர்வாகிகளிடம் இல்லை என்றே சொல்கிறார்கள். ஆளும்கட்சியினர் அனைத்து பகுதிகளிலும் வந்து உணவு, உடை மற்றும் தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். எங்கள் வட்டத்தில் உங்கள் ஆட்களை காணோமே என்று அடுத்தடுத்த கேள்விகளை தெரிந்தவர்கள் கேட்கும் போது பதில் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த கால கட்டத்தில் ஆற்றும் மக்கள் பணி கழகத்திற்கு மிகப் பெரிய எதிர்காலத்தை உருவாக்கும்’’ என்கிறார்.

ப்[ஓஒ

’’மழை வெள்ளத்திலும், பெருந்தொற்று காலத்திலும், மக்கள் கேள்விகளுக்கு அஞ்சாமல் வயதையும் பாராமல் சென்னையைச் சுற்றி வந்த முதலமைச்சரை பாராட்டுவதே அறம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் மனதை நாம் கவர வேண்டாமா? மாநகராட்சி தேர்தல்கள் விரைவில் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் கழகத்தின் சார்பில் தேர்தலில் நின்று வெற்றி பெற ஆசைப்படுபவர்கள் அசத்த வேண்டாமா? நீங்கள் செய்யும் பணியைப் பார்த்து ஆளும் கட்சி திகைக்க வேண்டாமா? உங்கள் செயல்பட்டைப் பார்த்து சரியான ஆள் இவர்தான் என்று மக்கள் நம்ப வேண்டாமா? ஆர்வமான தொண்டர்கள் உங்கள் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை செயல்பட வைப்பது உங்களின் அன்பும், சொல்லும் தான். நீங்கள் காட்டும் திசையில் பயணிக்க காத்திருக்கும் அவர்களுக்கு சரியான பாதையை நீங்கள் தான் காட்ட வேண்டும். தொண்டர்களுக்கு மிகுந்த ஆர்வம் இருக்கிறது பயன்படுத்த நிர்வாகிகளுக்குத்தான் மனமில்லை என்பதும் புரிகிறது. அண்ணா மலை வளர்கிறது என்றால் யாரோ தேய்ந்து கொண்டிருக்கிறார்கள்!’’ என்று அதிமுக தலைமையின் தோல்விகளை சுட்டிக்காட்டும் பூங்குன்றன், 

’’தொண்டர்களே! உற்சாகத்தை மட்டும் இழந்துவிடாதீர்கள், தன்னம்பிக்கைதான் பலம் என்பதையும் மறந்துவிடாதீர்கள். யாரையும் நம்பி நீங்கள் இல்லை. உங்களை நம்பித்தான் மற்றவர்கள்! எனவே, உடன்பிறப்பே! கட்சியை வளர்க்க ஆசை கொள்ளுங்கள். புதியவர்களை கழகத்தில் சேர்க்க வேகம் கொள்ளுங்கள். ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் பணி செய்யும் ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்று முழங்கிய இதயதெய்வங்களின் வார்த்தைகளுக்கு புகழ் சேருங்கள். பேரறிஞர் காட்டிய பாதையில், புரட்சித்தலைவரின் அடிச்சுவட்டில், அம்மாவின் வீரத்தோடு சிங்கமென மக்கள் பணியாற்றப் புறப்படுங்கள்!’’என்று அதிமுகவினருக்கு உத்வேகம் கொடுக்கிறார்.

ஜ்ஜ்

அண்ணாமலையின் இந்த பதிவு சரிதான் என்றும் அதிமுவினர்,   ‘’நீங்கள் சொல்வது உண்மைதான்.  அண்ணா மின்சாரத்துறையில் 5 ஆயிரம் கோடி அளவிற்கு தென்மாவட்டத்தில் உள்ள ஒரு பழுதடைந்த மின் நிறுவனத்திற்கு கைமாறு போகிறது என்பதை அண்ணாமலை தான் சொன்னார் அந்த டெண்டர் இல்லை என்று செந்தில் பாலாஜி கதற விட்டார்.  நியாயப்படி அதை செய்ய வேண்டிய பொறுப்பு கடந்த 10 ஆண்டுகளாக மின்சார துறையை கையில் வைத்திருந்த  தங்கமணி அவர்கள் தான் செய்திருக்க வேண்டும்.  அவர் செய்யாததை அண்ணாமலை செய்கிறார்.

 போக்குவரத்து துறையில் இனிப்பு பலகாரம் வாங்குவதில் உள்ள டெண்டர் முறைகேடுகளை சொன்னவர் அண்ணாமலை.  அதை சட்டப்படி எம்ஆர் விஜயபாஸ்கர் அல்லது ராஜேந்திரபாலாஜி தான் சொல்லியிருக்க வேண்டும்.   அண்ணாமலை அவர்கள் ஒரு வட்டச் செயலாளர் போல் சென்னையை சுற்றி வருகிறார் நாம் நேற்றிலிருந்து தான் தொடங்கியிருக்கிறோம்.   ஒரு அமைப்பு தேர்தல் நடத்துவதற்கு கூட நீதிமன்றம் மண்டையில் கட்ட வேண்டி இருக்கிறது அவைத்தலைவர் நியமிப்பதற்கு கூட நீதிமன்றம் உத்தரவிட வேண்டி இருக்கிறது அதற்குமேல் இறைவனும் அம்மாவும் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்,  100 % உண்மை எதிர்க்கட்சி யாரேன்றே விளங்கவில்லை நாம் எதிர்க்கட்சியாக இருந்து அண்ணாமலையை எதிர்க்கட்சி தலைவர் போல செயல்படுகிறார் என்றால் இதற்கு இடம் கொடுப்பது யார் அது யாராக இருந்தாலும் இதயதெய்வம் அம்மா அவர்களின் ஆன்மா தண்டிக்கும், அம்மா அவர்களுக்கு பிடிக்காத இந்த பாஜக கூட்டணியில் இருந்து அஇஅதிமுக விலகும் நாளே பொன்நாள்.!

ஆஅ

கழகம் இன்று பிளவுப்பட்டு ஆட்சியை இழந்து இருக்க காரணம் இந்த பாஜக இதை அடிமட்ட தொண்டன் தேர்தலுக்கு முன்பே உணர்ந்துவிட்டான்., தலைவர்கள் புரிந்தும் புரியாமல் இருப்பது ஏனோ தெரியவில்லை.! புரட்சித்தலைவர் இரத்தத்தை சிந்தி தொடங்கிய இயக்கம், புரட்சித்தலைவி உயிரை கொடுத்து வளர்த்த இயக்கம் இதை கூடநினைக்க நேரமில்லை தலைவர்களுக்கு இன்று.!’’ என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.