கலைஞர் நிதானமாக செய்ததை ஸ்டாலின் பாஸ்ட்புட் ஆக்குகிறார் - செல்லூர் ராஜூ

 
se se

தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்று பேசினார்.

 அப்போது அவர் ,  அதிமுகவால் அறிவிக்கப்பட்ட திட்டங்களைத்தான் திமுக அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது.   திமுக விளம்பரத்தை விட்டுவிட்டு மக்களுக்கு உண்மையான விடியலை தரவேண்டும் என்றார்.  தமிழகத்தில் மாணவர்கள்,  காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை  என்று சொன்னவர்,  திமுக ஆட்சிக்கு வந்தாலே கட்ட பஞ்சாயத்து ரவுடியிசம் தான் என்றும் கடுமையாக தாக்கினார்.

us

தொடர்ந்து பேசிய அவர்,  அதிமுக சோர்வடைந்து விட்டதாக சொல்கிறார்கள் புரட்சித்தலைவரின் படைகளை வெல்ல யாருமில்லை.  இன்று தேர்தல் நடந்தாலும் அதிமுகதான் ஆட்சியை பிடிக்கும்.   அதிமுகவை வென்றவன் கிடையாது கடவுளை கண்டவனும் கிடையாது என்று அழுத்தமாக சொன்னார்.

 மிட்டாய் கொடுத்து குழந்தையை கடத்துவது போல் அதிமுக மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்து விட்டது என்று நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் குறித்து பேசிய செல்லூர் ராஜூ,  சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரை பேசிய திமுக அனுமதிப்பதில்லை.  சட்டமன்றத்தில் மக்களை பற்றிதான் பேசப்போகிறோம்.  சொந்தக் கதையா பேசப்போகிறோம். இதற்கு ஏன் அனுமதி மறுக்கிறது என்று கேள்விஎழுப்பினார்.

 திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏதாவது ஒரு தொற்றுநோய் வந்து கொண்டிருக்கிறது என்று சொன்ன செல்லூர் ராஜூ,  நல்லவர்கள் ஆட்சிக்கு வந்தால் எந்தத் தொற்றும் வராது என்றார்.

ks

 நிலுவையில் உள்ள எம்எல்ஏ நிதியை தமிழக அரசு விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட செல்லூர் ராஜு,   நகர்ப்புற தேர்தல் வருவதால் திமுக அரசு மக்களுக்கு 5 ஆயிரம் நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 தேர்தல் நேரத்தில் மு.க. ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுங்கள்.   அதிமுக மக்கள் விரும்பும் கட்சி மக்களுக்காகவே எப்போதும் போராடும்.  ஆனால் எங்களை அடிக்கடி போராட தூண்டாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார் .

உதயநிதியை அமைச்சர் ஆக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என திமுகவினர் அவர்களாகவே சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.  மு. க .ஸ்டாலினை அரசியலில் நிதானமாக பக்குவமாக வளர்த்தார் கலைஞர்.  ஆனால் உதயநிதியை அமைச்சராக நினைப்பது பாஸ்ட்புட் அரசியல் என்று விமர்சித்தார்.