ஸ்டாலின் -அழகிரி : அந்த 45 நிமிடங்கள்

 
as

திமுகவில் இருந்து கடந்த 2014ம் ஆண்டில் நீக்கப்பட்டது முதல் அக்கட்சிக்கு எதிரான மனநிலையிலேயே இருந்து வந்தார் அழகிரி.  நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினுக்கு எதிராக மு. க. அழகிரி தனிக் கட்சி ஆரம்பிக்கப் போகிறார்,  தனிக்கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போகிறார்,  பாஜகவில் இணையப் போகிறார்,  அதிமுகவில் இணையப் போகிறார் என்று பல்வேறு தகவல்கள் ஒவ்வொரு நாளும் பரபரப்பாக வந்து கொண்டிருந்தன. 
தான் கட்சி தொடங்கப் போகிறேன் என்றும் ஆதரவாளர்களிடையே சூசகமாகப் பேசினார் அழகிரி.  இதனால் திமுகவில் சலசலப்புகள் எழுந்தன.   ஆனால் அவரின் குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்தி தனிக்கட்சி தொடங்கும் எண்ணத்தை மாற்றி விட்டனர்.  தேர்தல் நேரத்தில் அழகிரி எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். 

sa

 ஸ்டாலின் முதல்வர் ஆனதும் அவரை நேரில் சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அழகிரியின் மகன் பங்கேற்றார் அழகிரி பங்கேற்கவில்லை.  அதன் பின்னர் முதல்வர் ஸ்டாலின் மதுரையில் சில நிகழ்ச்சிகளுக்காக சென்றபோது அழகிரியுடன் சந்திப்பு நிகழும் என்ற பேச்சு எழுந்தது. மதுரையில் எதிர்பார்த்ததுபோலவே அழகிரி -ஸ்டாலின் சந்திப்பு நிகழவே இல்லை.

 இந்த நிலையில் கருணாநிதியின் இளைய மகன் தமிழரசுவின் மாமியார் ஜெயலட்சுமி கோவையில் நேற்று காலமானார்.  வடவள்ளியில் உள்ள வீட்டில் ஜெயலட்சுமி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.  

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலையில் அஞ்சலி செலுத்த கோவை சென்றார்.  மு .க அழகிரியும் அஞ்சலி செலுத்துவதற்காக கோவை சென்றிருந்தார்.  ஜெயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்திய அழகிரி அங்கேயே இருந்தார்.  அந்த நேரத்தில்தான் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தச் சென்றார்.  ஜெயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது,  அந்த வீட்டின் வளாகத்தில்தான் மு.க. அழகிரியும்,  மு, க, ஸ்டாலினும் இருந்தார்கள்.  ஒரே இடத்தில் இருவரும் 45 நிமிடங்கள் இருந்த போதும் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளவே இல்லை.