தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள் - சட்டமன்ற கலாய்ப்புக்கு சமூக வலைத்தளத்தில் பதிலடி

 
ss

 சட்டப்பேரவையில் கலாய்த்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி .  

திமுக ஆட்சிக்கு ஏற்றது முதல் மின்வெட்டு அதிகமாக இருந்ததாக புகார் எழுந்ததையடுத்து,   மின்வெட்டுக்கு காரணம் அணில்கள் தான் என்று சொல்லியிருந்தார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.   இது சலசலப்புக்கும் கேலிக்கும் உண்டானது .

பலரும் இதனால் அமைச்சர் செந்தில்பாலாஜியை  போட்டு வறுத்தெடுத்தனர்.   அணில்கள் மின்சார வயர்களில் கடித்து வைத்து விடுகின்றன.  மின்சார கம்பிகளில் பட்டு இறந்துவிடுகின்றன.   இதனால்தான் பராமரிப்பு பணிகள்  நடைபெற வேண்டியது உள்ளது.  அதனால் தான் மின்தடை என்று விளக்கம் வைத்திருந்தார் .  

se

ஆனாலும் மின்தடைக்கு இப்படி ஒரு காரணம் சொன்னதை அடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜியை அரசியல் பிரமுகர்களும், நெட்டிசன்களும் கடுமையாக விமர்த்து  வந்தனர்.   இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,  செந்தில் பாலாஜியின் இந்த அணில் குறித்து கலாய்த்தார்.

கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தின் போது முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ பேசியபோது,  மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருவதால் மின்சாரத்துறை அமைச்சர் அணில்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்.

se

 இதைக்கேட்ட அவையிலிருந்த அதிமுக உறுப்பினர்கள்  கலகலவென்று சிரித்தனர்.   ஆனால் இதற்கு அப்போது உடனடியாக அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் ஏதும் கொடுக்கவில்லை.   இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது டுவிட்டர் தளத்தில் செல்லூர் ராஜுவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
’’தமிழ்நாட்டில் மின் தடை இல்லை என தெரிந்து 'தடை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்கிறார் தெர்மோகோல் விஞ்ஞானி. எங்கள் பணியை நாங்கள் சிறப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.    சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க உடனடியாக தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள்.