புளியில் இருந்த பல்லி - நழுவிய கே.என்.நேரு
அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு ஊழல் நடைபெற்றது என்று பொதுமக்களும், பல்வேறு கட்சி தலைவர்களும் குற்றம்சாட்டி வரும் நிலையில் விவகாரம் குறித்து விசாரிக்க முதல்வரும் உத்தரவிட்டதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்க பொங்கல் தொகுப்பில் ஊழல் ஒருபோதும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு.
திருத்தணியில் கடந்த 7ஆம் தேதி என்று சரவண பொய்கை திருக்குளம் பகுதியில் இருக்கும் ரேஷன் கடைக்கு சென்ற 70 வயது முதியவர் நந்தன், பொங்கல் பரிசு பொருட்களை வாங்கி சென்றிருக்கிறார். வீட்டில் சென்று பிரித்து பார்த்தபோது புளி பார்சலில் இறந்து போன பள்ளி கிடந்திருக்கிறது. அதிர்ச்சி அடைந்த அவர் அதை அப்படியே எடுத்துக்கொண்டு ரேஷன் கடைக்கு சென்று அந்த பார்சலை மாற்றித் தருமாறு கேட்டு இருக்கிறார்.
அதற்கு கடை ஊழியர் சரவணன் மறுத்ததோடு, ஆளுங்கட்சியினரிடம் போய் கேட்டுக்கொள்ளுங்கள் அவர்கள்தானே கொடுத்தது அவர்களிடமே கேளுங்கள் என்று எகத்தாளமாக பேசியிருக்கிறார்.
அதற்குள் விசயத்தை கேள்விப்பட்ட செய்தியாளர்கள் அங்கு வந்துவிட அவர்களிடம் விவரத்தை கூறியிருக்கிறார் நந்தன். உடனே இது ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பாகிவிட, அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டார் என்று ரேஷன் கடை ஊழியர் சரவணன் திருத்தணி போலீசில் புகார் அளித்துள்ளார். தவறான தகவலை பரப்பிவிட்டார் என்று நந்தன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விட்டனர்.
இதனால் குடும்பமே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறது. இந்த நிலையில் நந்தனின் மகன் குப்புசாமி மன உளைச்சலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்ததை அடுத்து இந்த விவகாரம் பெரிதானது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்தார் . ஆட்சியில் முறையான கேள்வி கேட்டால் மரணம் தான் பதிலாகக் கிடைக்கிறது. இது தற்கொலை அல்ல ஜனநாயகப் படுகொலை என்றார்.
பாஜகவினர் இந்த விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ரமணா , முன்னாள் எம்பி தலைமையில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர் .
இந்நிலையில் சென்னை பாரிமுனையில் உள்ள பேருந்து நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அமைச்சர் கே .என். நேரு ஆய்வு செய்தார் . அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது, பொங்கல் தொகுப்பில் நடந்த ஊழல் குறித்து ஊழல் எழுப்பியபோது, பொங்கல் தொகுப்பில் ஊழல் நடைபெறவில்லை என்று தெரிவித்தார். அப்போது புளியில் பல்லி இருந்தது பற்றிய கேள்விக்கு, புளியில் பல்லி இருந்த பற்றின் எதுவும் தெரியாது என்று சொல்லி நழுவினார்.