கடனில் தத்தளிக்கும்போது இலவசங்களை எப்படி தர முடியும்? தேர்தல் வாக்குறுதியில் இலவசங்கள் அறிவிப்பதை தடை செய்ய வேண்டும்?

 
e

 தேர்தல் வாக்குறுதியில் இலவசங்கள் அறிவிப்பதை தடை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.   மக்களின் வரிப்பணத்திலிருந்து இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவினை ரத்து செய்வதற்கு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.   அந்த மனுவில் ,  தேர்தல் வரும்போது வாக்காளர்களை கவர வேண்டும் என்பதற்காக அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது நடைமுறையில் இருக்கிறது.  . இந்த நடைமுறை ஜனநாயக மதிப்பீடுகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது .   அதோடு அரசியல் சாசன நடைமுறைகளையும் இந்த வாக்குறுதிகள் கடுமையாக பாதிக்கிறது. 

su

 இந்த நடைமுறை அரசியல் கட்சிகள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற ஒன்றாகும் .  அதனால் ஜனநாயக நடைமுறைகளை பாதுகாக்க இதுபோன்ற நடைமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும் .  தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதை தடைசெய்யும் கட்டுப்பாடுகளை மாநில கட்சியாக அங்கீகாரம் அளிப்பதற்கான தேர்தல் சின்னம் ஒதுக்கீடு 1967 தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மேலும்,  தேர்தலுக்கு முன் பொது நிதியிலிருந்து இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பது வாக்காளர்களின் சமநிலையை பாதிக்கின்றது.   தேர்தல் நடைமுறையில் தூய்மையை கெடுக்கின்றது .  அதனால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14 , 162,  266( 3 )ஆகியவற்றை இந்த நடைமுறை மீறுகிறது என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், சண்டிகர் என்று தற்போது 5 மாநிலங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் வரவிருக்கிறது.    இதை முன்னிட்டு ஒரு கட்சி அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று அறிவித்து இருக்கிறது.   இன்னொரு கட்சி இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் அறிவித்திருக்கிறது .  பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் நிறைய இலவச வாக்குறுதி அளிக்கப் பட்டிருக்கின்றன.   அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ,ஓய்வூதியம் கூட வழங்க முடியவில்லை .  ஏற்கனவே அம்மாநிலத்தில் 77 ஆயிரம் கோடி கடன் இருக்கிறது.  இப்படி இருக்கும்போது இலவசங்களை எப்படி தர முடியும் என்றும் அவர் அந்த மனுவில் கேட்டிருக்கிறார்.