ஜெ., காலில் விழுந்த சேகர்பாபு தான்...எச்.ராஜா கடும் தாக்கு

 
p

 பதவிக்காக ஜெ., காலில் விழுந்த சேகர்பாபு தான் அறநிலையத்துறை அமைச்சராக இருக்கிறார் என்று கடுமையாக விமர்சித்தார் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா. இந்து கோவில்களின் நிதியை சட்டவிரோதமாக எடுத்து மீன்மார்க்கெட் கட்டுவது வன்மையாக கண்டிக்கத் தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.

h

 சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,   ஜனவரி 3ஆம் தேதி அன்று சிவகங்கையில் நடக்கும் வேலுநாச்சியார் பிறந்தநாள் விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி  பங்கேற்கிறார் என்று தெரிவித்தார்.  அவர் மேலும்,  சென்னை குயப்பேட்டை கந்தசாமி ஆதி மொட்டை அம்மன் கோயில் இடத்தில் மீன் மார்க்கெட் கட்டுவதற்காக கோயில்களில் நீதி 1.55 கோடி ரூபாயை எடுத்தது கண்டிக்கத்தக்கது என்றார்.

pks

அவர் மேலும் இது குறித்து, சென்னை குயப்பேட்டை கந்தசாமி ஆதி முட்டை அம்மன் கோவில் இடத்தில் மீன் மார்க்கெட் கட்டுவதற்காக திருத்தணி சுப்பிரமணியசுவாமி, திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி, வைகுண்ட பெருமாள் கோயில்களின் நீதியான 1.55 கோடி ரூபாயை எடுத்தது கண்டிக்கத்தக்கது.   அப்படி கோயில்களில் உபரி நிதி இருந்தால் அதை கட்டாயம் வருமானம் இல்லாதபோது கோயில்களுக்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

 தொடர்ந்து பேசிய அவர்,   இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு குறித்து கடுமையாக விமர்சித்தார்.   பதவிக்காக ஜெ., காலில் விழுந்த சேகர்பாபு தான் அறநிலையத்துறை அமைச்சராக இருக்கிறார்.  இந்துக்கோயில்கள் விஷயத்தில் அமைச்சர் சேகர்பாபு எல்லை மீறக் கூடாது என்று எச்சரித்தார்