என்னை வெறியனாக மாத்தாதீங்க.. மேடையில் செருப்பை தூக்கி காட்டிய சீமான்
சாட்டை துரைமுருகன் - மாரிதாஸ் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு கண்டு கடுப்பான சீமான், என்னை வெறியனாக மாற்றி விட வேண்டாம் என்று கொந்தளித்து, மேடையில் செருப்பை கழட்டி தூக்கி காட்டி எச்சரித்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை சங்கி என்றும், பாஜகவின் பி டீம் என்றும் திமுகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரசும் விமர்சித்து வருகின்றது. பதிலுக்கு சீமான் திமுகவினர் தான் சங்கிகள் திமுக தான் பாஜகவின் பி டீம் என்று விமர்சித்து வருகிறார். சில சமயங்களில், நாங்கள் பாஜகவின் பி டீம் என்றால் திமுக பாஜகவின் ஏ டீமா? என்றும் கேட்டு வந்தார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது தொடர்ந்து வழக்கு தொடுத்து வரும் திமுகவினர், பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் 4 வழக்குகளில் இருந்து வெளியே வந்துள்ளதால், அவர் வழக்கில் அரசு வழக்கறிஞரும் ஆஜர் ஆகாததால் கடுப்பாகி இருக்கிறார் சீமான்.
சென்னை அம்பத்தூரில் மறைந்த தமிழ் தேசிய அப்துல் ரவுப்பிற்கு நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த இருபத்தி ஆறாம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்றார் சீமான். அப்போது பேசிய அவர், சாட்டை துரைமுருகன் வழக்கில் திமுக வழக்கறிஞர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், மாரிதாஸ் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்? மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் யாரும் ஏன் ஆஜராகவில்லை? என்று கேள்வி எழுப்பிய சீமான்,

4 வழக்கில் இருந்து மாரிதாஸ் வெளியே வந்துள்ளார். இது தமிழக அரசுக்கு அவமானம். அப்படி என்றால்.. திமுக அரசு தான் உண்மையான சங்கி என்று கடுமையாக விமர்சித்த சீமான், திடீரென்று தன் காலில் இருந்த செருப்பை கழட்டி காட்டி, நான் ஜனநாயகவாதியாக இருக்கவேண்டியதை பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொருப்பு. என்னை வெறியனாக மாற்றி விட வேண்டாம் என்று எச்சரித்தார்.

என்னை வெறியனாக மாற்றி விட வேண்டாம் என்று சீமான் பேசியதும், காலில் கிடந்த செருப்பை கையில் எடுத்து தூக்கிக் காட்டியதும் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.


