சீட்டில் வந்த சீமான் பெயர் - சிரித்துக்கொண்டே உதயநிதி சொன்னது..

 
சு

சீமானை சங்கி என்றும் பாஜகவின் பி டீம் என்றும் திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இதனால் ஆவேசம் கொண்டு திமுகவினரையும்,  திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினையும்,  திமுகவின் இளைஞரணி தலைவராக உதயநிதி ஸ்டாலின் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார்.  தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் சீமான்,  உச்சகட்டமாக சென்னை அம்பத்தூரில் அண்மையில் நடந்த நிகழ்வில் பேசியபோது செருப்பைத் தூக்கிக் காட்டி எச்சரித்து பேசியிருக்கிறார்.  

ச்

திமுகவுக்கு எதிராக இதுவரைக்கும் சீமான் பேசியதிலேயே இந்த பேச்சுதான் உச்சகட்டமாக அமைந்திருக்கிறது.  ’’யாருடா உண்மையான சங்கி.  திமுகதாண்டா உண்மையான சங்கி.  சொங்கிப்பயளுகளா? யார பார்த்து யாரடா சங்கின்னு சொல்லுறீங்க.  செருப்பு இருக்கு பாருங்க... ’’என்று சொல்லிக்கொண்டே காலில் கிடந்த செருப்பை கழற்றி தூக்கிக்காட்டி எச்சரிக்கிறார்.

செ

தொடர்ந்து அவர், ’’ஜனநாயகவாதியாக இருக்கும்படி என்னை பார்த்துக்கொள்ள வேண்டியது உங்களுடைய பொறுப்பு.  என்னை வெறியனாக்கிடாத... சிக்கலாகிடும்.  மறுபடியும் என்னை கராத்தே பயிற்சிக்கு போங்கன்னு என் பொண்டாட்டி சொல்லுறா.  வேணாம்னு விலகி நிக்குறதுக்கு காரணம் இதுதான்.  சிக்கலாகிடும்.  தொலைச்சிபுடுவேன். கண்ட நாயெல்லாம் சங்கி சங்கின்னு.  ஜிங்கி ஜிங்கின்னு ஆடேன்.  நாயே என்னை பேசலேன்னா நாலு வீட்டுல கஞ்சி ஊத்தமாட்டான்.  நான் புலி என்பதால் போய் ஒரே அடியாக அடிச்சு கொல்லணும்.  உன்னை எல்லாம் அடிச்சு கொன்னுட்டு ஜெயிலுக்கு போறதுக்காடா என் ஆத்தா அப்பன் பெத்து வளர்த்திருக்காங்க.  சொல்லு..அதுக்கா கராத்தே, சிலம்பம், குஸ்தி எல்லா கலைகளும் கத்துக்கிட்டு இப்பேர்பட்ட தலைவனின்(பிரபாகரன்) பிள்ளையாக நின்னுக்கிட்டு இருக்கேன். பயித்தியகார பசங்க உயிரோட இருக்கணும்னா ஒரு ஓரமா போய் நிம்மதியா படுத்து தூங்குங்க.’’என்கிறார்.

க்ல்

இந்த நிலையில் சீமான் குறித்து உதயநிதி பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில்,  சீட்டுகளை குலுக்கிப் போட்டு எடுக்க அந்த சீட்டில் வரும் பெயர்களை படித்து அந்த நபர்கள் குறித்து  அந்த வீடியோ பதிவு அமைந்திருக்கிறது.   இதில் கமல் கமல்ஹாசன், விஷால், சந்தானம் என்று நடிகர்கள் பெயர்கள் வந்த போதெல்லாம் அவர்கள் குறித்து தனது எண்ணங்களை பகிர்ந்து கொள்கின்றார் .

சீமான் பெயர் சீட்டில் வந்தபோது சிரித்துக்கொண்டே அவர் குறித்து பேசுகிறார். ‘’ ரொம்ப எமோஷனலாக பேசுகிறார்.  சில நேரங்களில் ரொம்ப அவதூறாகவும் பேசி விடுகிறார்.  அவர் மீது எனக்கு நிறைய மரியாதை இருக்கிறது.  அவருக்குத்தான் என் மீது மரியாதை இல்லை என்று நினைக்கிறேன்’’என்று சிரித்துக்கொண்டே சொன்னவர்,  ‘’ அவரை நான் எங்கு எப்போது பார்த்தாலும் உரிமையா . என்னண்ணே எப்டி இருக்கீங்க என்று போய் பேசி விடுவேன். அவரும் என்னிடம் அப்போது நன்றாக தான் பேசுவார் ஆனால் மேடையில் மைக்கை பிடிக்கும் போது மட்டும் எமோசனல் ஆகி கன்னாபின்னாவென்று பேசி விடுகிறார். ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க.  அத மட்டும்தான் அவருகிட்ட சொல்ல நினைக்கிறேன்’’ என்கிறார்.