மீண்டும் பொ.செ.வை கையிலெடுத்த சசிகலா

 
sa

பொதுச்செயலாளர் என்கிற இப்பதவியை நீக்கிவிட்டு சட்ட விதிகளில் திருத்தம் செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை கொண்டு வரப்பட்டிருக்கிறது.  ஆனாலும் அதிமுகவில் இல்லாத சசிகலா தன்னை அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்று சொல்லி வருகிறார்.  அப்படித்தான் இத்தனை நாளும் அவர் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.   அவரது ஒவ்வொரு அறிக்கையின் முடிவிலும் வி. கே. சசிகலா கழக பொதுச்செயலாளர் அ.இ. அதிமுக என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

 இந்நிலையில் எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவர் கடந்த 24ம் தேதி அன்று வெளியிட்டிருந்த அறிக்கையில்,  வி. கே. சசிகலா கழக பொதுச்செயலாளர் அ.இ. அதிமுக  என்ற வாசகம் இடம் பெறவில்லை . இதனால் சலசலப்பு எழுந்தது.

sa

 எம்ஜிஆரின் 34 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சசிகலா வெளியிட்டிருந்த அறிக்கையில்,  இறுதியாக உறுதியேற்போம் உறுதி ஏற்போம் புரட்சித்தலைவரின் பாதையில் சென்றிட உறுதியேற்போம்,  நிரூபிப்போம்  நிரூபிப்போம் புரட்சித் தலைவரின் வாரிசுகள் நாம் என்பது நிரூபிப்போம்,  வென்று காட்டுவோம் வென்று காட்டுவோம் துரோகங்களை வேரறுத்து வென்று காட்டுவோம்,  போராடுவோம் போராடுவோம் தமிழர்களின் உரிமைக்காக போராடுவோம், , உருவாக்குவோம் உருவாக்குவோம் தமிழகத்தில் மக்களாட்சியை உருவாக்குவோம்,  புரட்சித் தலைவர் நாமம் வாழ்க,  புரட்சித் தலைவர் நாமம் வாழ்க! புரட்சித் தலைவி புகழ் ஓங்குக! என குறிப்பிட்டிருந்தார்.  அதன் பின்னர்,   கழகப் பொதுச் செயலாளர் அ.இ.அதிமுக என்று அவர் குறிப்பிடவில்லை.

தற்போது மீண்டும் அவர் பொ.செ.,வை கையில் எடுத்திருக்கிறார்.  அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு இன்றைக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில்,  கரும்பு விவசாயிகளிடமிருந்து பொங்கல் சிறப்பு தொகுப்பாக செங்கரும்பு கொள்முதல் செய்வது இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளிடம் தமிழக அரசே நேரடியாக கரும்பை கொள்முதல் செய்து சேரவேண்டிய தொகையையும் விவசாயிகளுடைய வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

 கரும்பு சாகுபடி கடந்த ஆண்டை விட அதிகமான கொள்முதல் விலை கிடைத்தால் தான் தங்களால் சமாளிக்க முடியும் என்ற நிலையில் தவிக்கின்றார்கள் விவசாயிகள். தாங்கள் விளைவித்த கரும்பு இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக கொள்முதல் செய்து வங்கி கணக்கில் சேர வேண்டிய தொகையை அரசே நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.