சேலம் முதல்வர் கூட்டம் - சிதம்பரம் தேரோட்டம் : எச்.ராஜா எழுப்பும் கேள்வி

 
hr

திமுக ஆட்சிக்கு வந்தது முதல்  இந்து விரோத நடவடிக்கைகளை அதிக மேற்கொண்டு வருகிறது என்று பாஜகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.  பிற பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் திமுக தலைவர் இந்துக்களின் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து செல்வதில்லை என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

 இந்த நிலையில் கொரோனா தொற்று நாளுக்குநாள் குறைந்து வந்தாலும்  20 ஆம் தேதி நடைபெறும் சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான மக்கள் பங்கேற்க தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.   இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், பாஜகவினர் இடையே இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

mk

அதே நேரம்,  சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கி இருக்கிறார்.  இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும்,  கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

 சிதம்பரம் கூட்டத்திற்கு தடை விதித்ததையும்,  சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் கூட்டத்திற்கு கூடிய கூட்டத்தினையும் வைத்து  தமிழக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கேள்வி எழுப்பி இருக்கிறார்.

’’சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை பார்க்க அரசு மக்களை திரட்டலாம். கொரோனா வராது. ஆனால் சிதம்பரத்தில் தேரோட்டத்திற்கு தடை. திருச்செந்தூர், திருவண்ணாமலை, சிதம்பரம் என்று அனைத்து இடங்களிலும் இந்துக்களுக்கு வழிபாட்டுரிமை மறுக்கப்படுகிறது. ஆனால் பணிமயமாதா தேரோட்டத்திற்கு அனுமதி’’ என்று கொதித்தெழுந்திருக்கிறார்.