என் மனம் முழுவதும் வருத்தம் பரவி கண்ணீர் கசிகிறது - ஜெ., உதவியாளர் உருக்கம்

 
ஒப்

 மறைந்த முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர்  எஸ்.டி.சோமசுந்தரத்தின் மனைவி சகுந்தலா(85) வயது முதிர்வு காரணமாக கடந்த வியாழக்கிழமை அன்று காலமானார்.   பட்டுக்கோட்டை வட்டம் செண்டாங்காடு கிராமத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.   சகுந்தலாவின் உடலுக்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். பைத்திலிங்கம்,  முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், ஓ.எஸ். மணியன்,  மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.  

ட்ச்

 பல்வேறு கட்சி தலைவர்களும் சகுந்தலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.  இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றம் சங்கரலிங்கம்,    இரங்கல் தெரிவித்து சகுந்தலாவுடனான  தனது நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்.

பாசத்தாய் சகுந்தலா சோமசுந்தரம் அவர்களின் மறைவு மனதை வருத்தம் கொள்ளச் செய்கிறது.  எஸ்டிஎஸ் - தமிழக அரசியலின் சாணக்கியர். தஞ்சை மாவட்ட அரசியலின் சிற்பி. தமிழகத்தில் பலருக்கு அரசியல் பாடம் நடத்திய ஆசான். அவரிடம் பாடம் பயின்றவர்கள் எவரையும் எதிர்க்கும் துணிச்சல் கொண்டவர்கள். அரசியல் சதுரங்கத்தில் அற்புதமாய் காய் நகர்த்தத் தெரிந்தவர்கள். பணம் இல்லாவிட்டாலும் தங்களது அறிவால் அரசியல் செய்யக்கூடியவர்கள். அப்படி பலருக்கு அரசியலைக் கற்பித்து, பலரது வாழ்வில் ஒளியேற்றிய ஐயாவின் மனம் அறிந்து செயல்பட்டவர் தான் அவரது மனைவி பாசத்திற்குரிய அம்மா சகுந்தலா சோமசுந்தரம் அவர்கள். கபடமற்ற அன்பிற்குச் சொந்தகாரர். தஞ்சை மண்ணின் விருந்தோம்பல் பண்பிற்கு இலக்கணமானவர் என்று சொல்லும் பூங்குன்றன்,

ச்ச்

என் தந்தை மீதும், என் மீதும் தாய் காட்டிய அன்பைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. சாப்பிடச் சொல்லி உடன் இருந்து பரிமாறிய பாசத்தை விவரிக்க வார்த்தைகளும் இல்லை. உயர்ந்த நிலையில் இருந்தாலும் தொண்டர்கள் மீது அன்பை பொழிந்த தாயின் மறைவு துயரத்தைத் தருகிறது. வெற்றியாளரின் பின்னால் மறைந்து வெற்றிக்கு தூண்டுதலாய் இருந்த தன்னலமற்ற தாயின் மறைவு கேட்டு மனம் முழுவதும் வருத்தம் பரவி கண்ணீர் கசிகிறது என்கிறார்.

ஐயா அவர்களிடம் பாடம் பயின்ற மாணவர்கள் குருவிற்கு மரியாதை செய்யும் விதத்தில் ஒரத்தநாட்டில் ஐயாவின் முழுவுருவ வெண்கல சிலையை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த நற்செயலுக்கு துணை நிற்க நாங்கள் தயார் என்றும் வலியுறுத்தும் பூங்குன்றன்,  அம்மாவை இழந்து வாடும் அண்ணன்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. புனிதத்தாயின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும் என்கிறார் .