#Rewind2021 தெறித்து ஓடும் ஓபிஎஸ் இளையமகன் - இழுத்துப்பிடிக்கும் ஆதரவாளர்கள்

 
வ்

தமிழகத்தில் முன்னாள் முதல்வரும்,  துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் தற்போது  போடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும்,  எதிர்க்கட்சி துணைத் தலைவராக உள்ளார்.  

ஒப்

 கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது.  அது தேனி தொகுதி.   ஓபிஎஸ் மூத்த மகன் ரவீந்திரநாத் மட்டுமே அத்தேர்தலில் வெற்றி பெற்றார்.  ரவீந்திரநாத்  எம்.பியை  எப்படியாவது  மத்திய அமைச்சர் ஆக்கிவிடவேண்டும் என்று  பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார் ஓபிஎஸ் என்ற பேச்சு இருக்கிறது.  

ர்

மத்திய அமைச்சரவையின் விரிவாக்கத்தில் ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி காத்திருக்கிறது என்ற பேச்சு எழுந்தது.  ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்கிற அதிருப்தி ஓ.பன்னீர்செல்வத்திடம் அதிகம்  இருக்கிறது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

 ஓ. பன்னீர் செல்வத்தின் இளைய மகன் ஜெயப்பிரதீப்பை கடந்த சட்டமன்ற தேர்தலில் களமிறக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வந்தனர்.  ஜெயபிரதீப் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நூற்றுக்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டிருந்தன.  கம்பம் ,கொளத்தூர் ,வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் ஜெயபிரதீப் போட்டியிட விரும்பி நூற்றுக்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டிருந்தன.  ஆனால் சட்டமன்ற தேர்தலில் ஜெயபிரதீப் போட்டியிடவில்லை .

ப்

இந்த நிலையில் பெரியகுளம் சேர்மனாக ஜெயபிரதீப்பை களம் இறக்க அவரது ஆதரவாளர்கள்  தீவிரம் காட்டி வருகின்றனர்.  சட்டமன்றம் ,உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியை தழுவிய அதிமுக  வரவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றிட வேண்டும் என்ற முனைப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

வ்ப்

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் சேர்மன் பதவிக்கு பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப்பை களமிறக்க  ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுக்க,   தனது மூத்த மகனும் தானும் அரசியல் இருப்பதால் இரண்டாவது மகனையும் அரசியல் இறக்குவதை பன்னீர்செல்வம் விரும்பவில்லை என்று சொல்லி வருகிறார்கள். அதற்கேற்றார்போல் ஜெயபிரதீப் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உடையவராக இருந்துவருகிறார்.  கோயில் திருப்பணிகள்,  கும்பாபிஷேக  என்று ஆன்மீக பக்கமாகவே தன்னை அதிகம் திரும்பிக் கொண்டிருக்கிறார்.   மிச்ச நேரம் விவசாய பக்கம் திரும்பி இருக்கிறார்.

ஜ்ப்

ஆனாலும் அவரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களம் இறக்கி விட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.  விவசாயம் , ஆன்மிகம் என்று அதை சுற்றியே வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயபிரதீப் அரசியலில் இருக்க வேண்டுமென்று தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் முயன்று வருகிறார்கள். இதன் அடுத்த கட்டமாக பெரியகுளம் நகராட்சி சேர்மன் பதவிக்கு அவரை களம் இறக்கியே ஆக வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்றனர். 

ப்ர

 இதற்கு முன்னர் பெரியகுளம் நகராட்சி சேர்மனாக பன்னீர் செல்வத்தின் சகோதரர் ராஜா இருந்தார்.  பெரியகுளம் நகராட்சியை தற்போது கைப்பற்ற திமுக மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பல்வேறு வியூகங்களை வகுத்து கொண்டிருக்கும் நிலையில்,  அதை எதிர்த்து பலமான வேட்பாளரை அதிமுகவிலிருந்து நிறுத்த வேண்டும் என்றால் அதற்கு ஜெயபிரதீப் தான் பொருத்தமாக இருப்பார் என்று பெரியகுளம் அதிமுகவினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

 ஒருவேளை அரசியலில் இறங்கிவிட்டால்,  திமுக குடும்ப கட்சி என்ற விமர்சனம் அதிமுகவுக்கு திரும்பி விடுமோ என்கிற தயக்கமும் இருக்கிறாம் ஓபிஎஸ் மற்றும் அவரது இளைய மகனுக்கு.  ஆனாலும் விடுவதாக இல்லை அவரது ஆதரவாளர்கள்.