பாமக மாஜி எம்.எல்.ஏ.வின் கடிதத்தை வெளியிட்ட ராமதாஸ்

 
rr

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சிக் கொடியேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ‘பாட்டாளிகளின் கொடி எங்கும் பட்டொளி வீசி பறக்கட்டும்! ’  என்ற தலைப்பில் கடந்த 19-ஆம் தேதி முகநூல் பதிவு வெளியிட்டிருந்தேன் என்று சொல்லும் பாமக நிறுவனர் ராமதாஸ், 
அது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞரும், பூந்தமல்லி தொகுதி பா.ம.க.  வேட்பாளருமான இராஜமன்னார் கருத்துத் தெரிவித்து எனக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அவ்வையாரின் வாழ்க்கை நெறி பாடல் தத்துவங்கள் குறித்த எனது மதிப்பீடும், அவரது மதிப்பீடும் ஒன்றாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.  அவரது கருத்து உண்மை தான். இந்த விஷயத்தில் மட்டுமல்ல... அனைத்து விஷயத்திலும் எனது நிலையும், பாட்டாளிகளின் நிலையும் ஒன்றாகவே இருக்கும். அதனால் தான் நாம் பாட்டாளிகள் என்கிறார்.

rrs

இனி ராஜமன்னாரின் கடிதத்தினையும் வெளியிட்டிருக்கிறார்.

இராஜமன்னார் பி.ஏ.,பி.எல்.,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் 
பாட்டாளி மக்கள் கட்சி 

பெறுநர் 
மரியாதைக்குரிய ஐயா டாக்டர் ச.இராமதாசு அவர்கள் 
நிறுவனர் - பாட்டாளி மக்கள் கட்சி

மரியாதைக்குறிய ஐயா ,
பாட்டாளிகளின் கொடி எங்கும் பட்டொளி வீசி பறக்கட்டும்! என்று இன்று தாங்கள் எழுதியதில், வாழ்க்கையின் தத்துவங்களை சுருங்கச் சொல்லி விளங்க வைத்தவர் திருவள்ளுவர். அவரையும்விட வாழ்க்கை நெறிகளை சுருக்கமாக சொன்னவர் அவ்வையார் என்று கூறியுள்ளீர்கள்.

bb

ஐயா, 
பெருமைக்குக் கூறவில்லை... தங்களின்  உந்துதலால்... நான் எழுதிய  1) வேழம் எய்த வேல் 2) கலர் நில உப்பு என்ற புத்தகங்களில் இரண்டாவதில், அவ்வையார் பாடல்கள் முன்னுரையில் நான். அவ்வையாரின் இந்த நீதி நூல்கள் மாணவர்களுக்கு உரை ஆசிரியர்களின் உதவி இல்லாமல் புரியும் வண்ணம் அமைந்தவை, மிகவும் எளிமையானவை, இனிமையானவை. திருவள்ளுவர் ஒன்றே முக்கால் அடியில் உலகத்தை அளந்தார், ஆனால் அவ்வையார் முக்கால் அடியில் உலகத்தை அடக்கி நீதி நெறிமுறைகள் வகுத்தார், என்று எழுதியுள்ளேன். ஐயாவின் கருத்தினையே நானும் எழுதி இருப்பது எனக்கு மன மகிழ்ச்சியை தருகிறது.
அதைப்போல அய்யா, அவ்வையின் ‘நல்வழி’ நூலில் 
நீரில்லா ‘நெற்றி பாழ்’...
......
....... பாழே, 
மடக்கொடி இல்லா மனை’ 
என்ற பாடலை எழுதி அத்தோடு,
‘ஊரின் நுழைவாயிலிலும், ஊருக்குள்ளும் ஏற்றப்படாத கட்சி அமைப்பு பாழ்’ என்று பாட்டாளி சொந்தங்களுக்கு நல்வழி காட்டி இருப்பது உணர்ச்சி ஊட்டியது ஐயா!
அவையின் ‘மூதுரை’ நூலில் உள்ள ஓர் பாடலை சற்றே திருத்தி எழுதுகிறேன்.
‘ஐயா போலும் நல்லாரைக் காண்பதுவும்
நன்றே; வீரதீரமிக்க போராளி சொல் கேட்பதுவும்
நன்றே; குஹிலகுல  சத்திரியரின்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே;
ஆயிரம் பிறை கண்ட மகானோடு இணங்கி
இருப்பதுவும் நன்றே’!!!