ரஜினி கருப்பு பன்றி..விஜயகாந்த் குடிகாரன்..சூர்யா.. பாமகவை விளாசும் வன்னியர் சங்கத் தலைவர்

 
rv

 ராமதாஸ் ஒட்டுமொத்த வன்னியர்களின் முகம் கிடையாது என்கிறார் வன்னியர் சங்கத் தலைவர் சி.என். ராமமூர்த்தி. 

 ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமூகத்தின் மறைந்த தலைவர் குருவின் பெயரையும்,  வன்னியர் சமூகத்தின் அடையாளமான அக்னி கலசத்தையும் அவமதித்து விட்டதாக சொல்லி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியும் பாமகவினரும் தொடர்ந்து சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வழக்கு தொடுத்து வருகின்றனர்.   5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

vs

 இந்த நிலையில் ஒட்டுமொத்த வன்னியர்களின் முகம் கிடையாது ராமதாஸ் என்று விமர்சித்திருக்கிறார் வன்னியர் சங்கத் தலைவர் சி.என். ராமமூர்த்தி.   அவர் மேலும்,  இதுகுறித்து இட ஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் இறந்து போனார்கள்.  அவர்களின் குடும்பத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை பாமக.  அந்த 25 பேரை வைத்து தான் இவர்களின் வாழ்வாதாரம்.   ஆனால் அந்த 25 பேர் குடும்பத்தினரும் ராமதாஸ் வீட்டுக்கு போய் உதவி கேட்டபோது,  தாலி அறுத்தவர்கள் எல்லாம் இங்கே வரக்கூடாது ஓடிப்போங்கடி  என்று வெளியில் விரட்டியவர்தான் இந்த ராமதாஸ் என்கிறார்.

மேலும்,   பாப்பனப்பட்டு ரங்கா முதன்முதலாக இட ஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் பலியானார்.   25வது ஆளாக சிறு தொண்டைமான் பலியானார்.  நமக்காக இறந்தார்கள் என்ற குறைந்தபட்ச இறக்கம் கூட ராமதாசிடம் இல்லை.  அவர்களை வைத்துத்தானே நாம் வாழ்கிறோம்.  அவர்களின் உயிர் தியாகத்தால் தான் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறோம் என்ற நினைப்பே ராமதாசிடம் இல்லை.   நாங்கள்தான் அந்த 25 பேர் குறித்து அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் முறையிட்டு,  நீங்கள் சமூகநீதிக் காவலர் . இவர்களுக்கு கருணை தொகை கொடுங்கள் நிதி உதவி செய்யுங்கள் என்று கேட்டோம்.

j

 இதையடுத்து அவரும் மூன்று லட்சம் ரூபாய் கருணைத் தொகை,  மாதாமாதம் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார்.  அவர் கொடுத்த அந்த மூன்று லட்சம் ரூபாயையும் வாங்கிட்டு போய் விட்டார் ராமதாஸ்.    நான் ஐந்து லட்சம் தருகிறேன் எனச் சொல்லி ஏமாற்றி வாங்கி சென்று விட்டார்.  இப்போது அந்த 25 பேரின் குடும்பத்தினர்   கூலி வேலைக்கு சென்று பிழைத்து வருகிறார்கள்.   அவர்களது குடும்பம் நிர்க்கதியாக நடுத்தெருவுக்கு வந்து விட்டது என்று ராமதாஸை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

ச்

அவர் மேலும்,  பாபா திரைப்பட பிரச்சினையின் போது ரஜினியை கருப்பு பன்றி என  கேவலமாக பேசி வம்புக்கு இழுத்தார் அன்புமணி.  ஆனால்  மகள் திருமணத்திற்கு ரஜினி வீட்டுக்கே சென்று பத்திரிக்கை வைத்தார்.  அவரும் திருமணத்திற்கு வந்திருந்தார்.  அன்புமணி செய்தது மானங்கெட்ட தனம்.  அதுபோல நடிகர் விஜயகாந்தை குடிகாரன் என்று மோசமாக விமர்சித்தார்கள்.  பிறகு அன்புமணி தேர்தலில் நிற்கும் போது பிரேமலதா விஜயகாந்த் அவருக்காக வாக்கு சேகரித்தார்.   இவர்கள் தொடர்ந்து சினிமா நடிகர்களை பிரச்சனை செய்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.  விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை திரைப்படம் வந்தபோது  கலையை கலையாக பாருங்கள் என்று சொன்னார் அன்புமணி.  ஆனால் இன்றைக்கு ஜெய்பீம் படத்திற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.  பாமக தொடர் தோல்வியை சந்தித்து வருவதன் வெளிப்பாடுதான் இதெல்லாம்  என்கிறார் சி.என். ராமமூர்த்தி.