திருப்பதி லட்டு விவகாரத்திலும் சிக்குகிறாரா ராஜேந்திரபாலாஜி

 
டி

 திருப்பதி லட்டு விவகாரத்திலும் சிக்குகிறார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.   திருப்பதியில் லட்டு தயாரிப்பதற்கான நெய் அனுப்பியதில் நடந்துள்ள முறைகேட்டில் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பு இருக்கிறதா என்று லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது. 

 கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி.   இவர் தனது பணி காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன .

ர்ப்

2019-ம் ஆண்டு முதல் ஆவின் நிறுவனத்தில் நடந்த பணி நியமனங்கள் பொருட்கள் கொள்முதல் தற்காலிக பணி நியமனங்களில் நடந்த முறைகேடுகள் மேலும் அவருக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்ட புகார்கள் குறித்து மதுரை சாத்தமங்கலம் பகுதியில் இருக்கும் ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

 மதுரையில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற பணி நியமனம், ஒப்பந்தம், பொருட்கள் விற்பனை , கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர் .   அப்போது திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் லட்டு தயாரிப்புக்கு நெய் அனுப்பியது தொடர்பாகவும்,  தனியார் நிறுவனங்களுக்கு போலியான ஆவணங்களை பயன்படுத்தி  நெய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது. 

ப்

 தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டதில் தீபாவளி இனிப்பு வகைகள் ஆகியவற்றிலும் மோசடி நடந்ததற்கான ஆவணங்களும் கிடைத்துள்ளதாக தகவல். லாப நோக்கில் ஆவின் நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. 

 இதையடுத்து பல்வேறு இடங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆவணங்கள் குறித்தும் அது தொடர்பான இடங்களில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் வேலை வாங்கித்தருவதாக பணத்தை வாங்கிக்கொண்டு வேலை வாங்கி கொடுக்காமல் பணத்தையும் திருப்பி கொடுக்காததால் மோசடி செய்த புகாரில் தலைமறைவாக இருக்கும் ராஜேந்திரபாலாஜியை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.  அவர் டெல்லியில் பதுங்கி இருப்பதாகவும் இதற்காக தனிப் படையினர் டெல்லிக்கு விரைந்து உள்ளதாகவும் தகவல்.