பி.எம்.கேர்ஸ் இணையதள சர்ச்சை - மத்திய அரசு விளக்கம்

 
pm

பி. எம். கேர்ஸ் நிதி அறக்கட்டளையின் இணையதளப் பக்கத்தில் பிரதமரின் பெயர், படம் , மற்றும் தேசியக்கொடி பயன்படுத்துவது குறித்து மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் விக்ரந்த் சவான் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.  

அம்மனுவில்,   கொரோனா தொற்று பரவும் போது சுகாதார மற்றும் அவசர தேவைகளுக்காகவும்,  பொதுமக்களின் மருத்துவர் நல திட்டங்களுக்காகவும் பி. எம். கேர்எஸ் நீதி என்கிற அறக்கட்டளையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். 

pm c

பிரதமர் மோடி துவக்கி வைத்திருந்தாலும்  மத்திய அரசுக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால் அந்த அறக்கட்டளையின் இணையதளத்தில் பிரதமரின் பெயர், அவரது படம் மற்றும் தேசியக்கொடி,  தேசிய சின்னம் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.   இது அரசியல் சட்டத்தை மீறுகின்ற செயல்.  அதனால் இணையதளத்திலிருந்து பிரதமரின் பெயர் , படம் தேசிய கொடி, தேசிய சின்னம் ஆகியவற்றை நீக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சயீத், திகே அமர்வு முன் கடந்த அக்டோபர் மாதம் 12ம் தேதி அன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள்,  இது குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

 இதற்கு மத்திய அரசு நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது.  அந்த பதில் மனுவில்,   பிரதமரின் இயற்கை பேரிடர் நிதிக்கான இணையதளத்தில் பிரதமரின் பெயர் மற்றும் படம் தேசியக்கொடி, தேசிய சின்னம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.   பிரதமரின் இயற்கை பேரிடர் நிதி போன்றதுதான் பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளையும்.  இந்த  இரண்டையும் பிரதமர்தான் நிர்வகிக்கிறார்.   அதனால் பி. எம். கேர்ஸ் நிதிக்கான இணையதளத்தில் பிரதமரின் பெயர்,  புகைப்படம் தேசியக்கொடி , தேசியசின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதில் எந்தத் தடையும் இல்லை, கட்டுப்பாடும் இல்லை என்று தெரிவித்திருக்கிறது.