பாஜகவில் இணைய விருப்பமனு கொடுத்து காத்திருந்த ப.சிதம்பரம்..

 
pச்

கட்சி எழும்புகிறதோ இல்லையோ, கட்டிடங்கள் எழும்புகின்றன.  நான்கு நகரங்களில் மாவட்டக் கட்சி்யின் புதிய, பெருமதிப்புள்ள அலுவலகக் கட்டிடங்களை ஒரே நாளில் திறக்கும் கட்சிக்குப் பாராட்டுக்கள் என்று பாஜகவை விமர்சித்துள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்.

கட்சி எழும்புகிறதோ இல்லையோ என்ற ப.சிதம்பரத்திற்கு கமெண்டிற்கு,  படுத்துவிட்ட கட்சியிடமிருந்து பாராட்டுக்களையா பெறமுடியும் என்று கேட்கிறார் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

அவர் மேலும்,  ‘’எழும்பாத கட்சியில் இணைய விருப்பமனு கொடுத்து அத்வானி ஜி ஆபீசில் காத்திருந்ததும்,  அத்வானி TN GS LG இடம் கருத்து கேட்டதும் LG கனிவாக மறுத்ததும் எனக்கு நினைவிருக்கிறது உங்களுக்கு இருக்குமா?’’ என்று சிதம்பரத்தை பார்த்து கேட்கிறார்.

ச்ர்

ஊழல்கள் பல செய்து கட்டிடங்களை எழுப்பியதால்,சிறையில் இருக்க வேண்டியவர்கள் பிணையில் இருந்து, கட்சியை காலி செய்து, தொண்டர்களை நடுத்தெருவில் நிறுத்திய காங்கிரஸ் தலைவர்கள்,தொண்டர்களுக்காக பெருமதிப்புள்ள கட்டிடங்களை அர்ப்பணிக்கும் தலைவர்கள் உள்ள கட்சியை விமர்சனம் செய்வதில் வியப்பில்லை என்கிறார் பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

பாஜகவின் இந்த பதிலடியில் தமிழக காங்கிரசில் சலசலப்புகள் எழுந்துள்ளன.

uu

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் விதிமுறைகளை மீறி வெளிநாட்டு முதலீடு கிடைக்க உதவியதாக ப.சிதம்பரம் டு சிபிஐ போலீசாரால்  கைது செய்யப்பட்டு 106 நாட்கள் சிறையில் இருந்த பின்னர் ஜாமீனில் வெளியே வந்தபோது,  சென்னை விமான நிலையத்தில் அவரை சூழ்ந்த செய்தியாளர்கள்,  பாஜகவில் இணைந்த பலரும் ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.  

அதே போல  ப.சிதம்பரமும் பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான செய்திகள் குறித்து அவரிடம் கேட்டபோது, பாஜக என்பது கங்கை நதி என்றும் அதில் குளித்தால் பாவங்கள் மறையும் என்றும் அவர்கள் சொல்கின்றார்கள்.   நான் ஒருபோதும் அந்த கங்கையில் குளிக்க மாட்டேன்.  நான் நீதிக்கும் நியாயத்திற்கும் மட்டுமே தலைவணங்குகிறேன்.  அநியாயத்திற்கு வளைய மாட்டேன்.  பாரதி சொன்னது போல் நான் வீழ்வேன் என நினைத்தாயோ என்று கேட்டார்.

ப்ச்

 மேலும்,  மற்றவர்களைப் போல நான் வளைந்து போகமாட்டேன்.  உங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்கள் நான் வீழ்வேன் என நினைத்து இருக்கலாம்.  இல்லை ஒருக் காலும் இல்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.