கருத்துக்கு கருத்து - திமுகவுக்கு திருமா வைத்த குட்டு
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் திமுகவினரின் இப்போக்கு கோழைத்தனத்தின் உச்சம் என்று , நாம் தமிழர் கூட்டத்தில் புகுந்து தகராறில் ஈடுபட்ட திமுகவினர் குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார் அக்கட்கியின் தலைவர் சீமான். கருத்துக்கு கருத்து தான் எடுத்து வைக்க வேண்டும் வன்முறையில் ஈடுபடக்கூடாது. கருத்துக்கு கருத்து தான் எடுத்து வைக்க வேண்டும் வன்முறையில் ஈடுபடக்கூடாது. நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட திமுகவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.
இருபது ஆண்டுகளைக் கடந்தும் இஸ்லாமியர் என்பதனாலேயே விடுதலை செய்யமறுக்கும் அரசின் செயலைக் கண்டித்தும், 30 ஆண்டுகளைக் கடந்தும் சிறைக்கொட்டடியில் வாடும் ஏழு பேர் விடுதலையைக் கோரியும் தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்ட மேடையில் மாநில பேச்சாளர் ஹிம்லர் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று மேடையில் ஏறிய திமுக மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் உள்ளிட்டவர்கள், மேடையிலிருந்த மைக்கை பிடுங்கி தூர வீசி நாற்காலியை தூக்கி நாம் தமிழர் கட்சியினர் மீது அடித்திருக்கிறார்கள்.
பின்னர் அங்கிருந்து மைக்செட் ஸ்பீக்கர் உள்ளிட்டவற்றை அடித்து துவம்சம் செய்ய முற்பட்ட போது உங்களுக்குள் உள்ள சண்டையில் என் பொருளை ஏன் சேதம் செய்கிறீர்கள் என்று மைக் செட் காரர் ஆத்திரத்துடன் அவர்களை தடுத்து சத்தம் போட்டிருக்கிறார். இதன் பின்னர் நாம் தமிழர் கட்சியினர் திமுகவினருடன் கடுமையான வாக்குவாதம் செய்ய , உடனே போலீசார் மேடையேறி திமுகவினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். நடந்த சம்பவம் குறித்து மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திமுகவின் வன்முறைக்கும்பல் அத்துமீறி உள்நுழைந்து, மேடையை உடைத்து, கட்சியின் நிர்வாகிகள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் கொலைவெறித்தாக்குதல் நடத்த முற்பட்டதும், அதனைக் காவல்துறையினர் கைகட்டி நின்று வேடிக்கைப் பார்த்ததும் கடும் கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் திமுகவினரின் இப்போக்கு கோழைத்தனத்தின் உச்சம். வடமாநிலங்களில் பாஜக செய்யும் அதேவகையிலான வன்முறையையும், சனநாயகத்திற்கு எதிரானக் கொடுங்கோல் போக்கையும் ஏவிவிடும் திமுகவினரின் செயல் இழிவானது. அதிகாரத் திமிரிலும், ஆட்சி தந்த மமதையாலும் காவல்துறையைக் கைவசம் வைத்துக்கொண்டு அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயல் வெட்கக்கேடானது என்று கண்டனம் தெரிவித்திருந்தார் சீமான்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியபோது, நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தகராறு செய்த திமுகவினரின் குறித்து கேள்வி எழுப்பிய போது, கருத்துக்கு கருத்து தான் எடுத்து வைக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடக்கூடாது. நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட திமுகவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்,