பாஜகவுக்கு தாவும் முலாயம்சிங் இளையமருமகள்

 
b

உத்திரப் பிரதேச மாநிலத்திற்கு வரும் 10ஆம் தேதியன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.   7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.  தேர்தல் நெருங்கும் நிலையில் அக்கட்சியிலிருந்து 11 எம்எல்ஏக்கள் வெளியேறி இருக்கின்றனர்.  அவர்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர்.  

mu

இதனால் பாஜகவுக்கு பலமிழந்துள்ள நிலையில்,  சமாஜ்வாதி கட்சிக்கு பலம் கூடும் வகையில் சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்த இருக்கிறார் முலாயம் சிங்கின் இளைய மருமகள்.

 முலாயம் சிங்கின் இளைய மகன் பிரதீப் யாதவ்.   இவரது மனைவி அபர்னா  யாதவ் .   கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது .  ஆனால் பாஜகவின் ரீட்டா பகுணாவிடம் இவர் தோல்வியை தழுவினார்.

yy

 இந்த நிலையில் தற்போது 2022 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளார்  என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது இருக்கும் சூழலில் அவர் பாஜகவில் இணைந்தால் அக் கட்சிக்கு மிகவும் லாபகரமாக அமையும் என்று பேசப்படுகிறது.

 முலாயசிங்கின் மருமகள் பாஜகவின் இணைணவதால் உத்தரபிரதேச அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.