மோடி எங்களுக்கு எந்த காலத்திலும் எதிரியாக இருந்தது இல்லை - திமுக அந்தர்பல்டி

 
ச்ம்

தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு வழக்கம்போல் திமுக  கருப்புக்கொடி காட்டுமா? என்று முன்வைக்கப்பட்ட கேள்விக்கு,  திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி அளித்திருக்கும் பதில் தான் திமுக ஏன் திடீர் அந்தர்பல்டி அடிக்கிறது என்று பலரும் விமர்சிக்க காரணமாக அமைந்திருக்கிறது. 

 பிரதமர் மோடிக்கு  திமுக கருப்பு கொடி காட்டுமா? என்ற கேள்விக்கு, ? பிரதமர் மோடிக்கு திமுக ஏன் கருப்புக் கொடி காட்ட வேண்டும்? என்று எதிர் கேள்வி கேட்டிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி.

எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் அவருக்கு கருப்புக்கொடி காட்டினோம். .  ஆனால் இப்போது நாங்கள் அவரை விருந்தினராக அழைத்து இருக்கிறோம். அவர் தமிழகத்தின் விருந்தினராக வருகிறார். நாங்களே அழைத்துவிட்டு நாங்களே கருப்பு கொடி காட்டினால் அது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும் என்று அவர் கேட்டிருக்கிறார் .

ஆ

அவர் மேலும் பேசிய போது,   தமிழ்நாட்டில் எய்ம்ஸ் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடியை நாங்கள் அழைத்திருக்கிறோம்.  அதன் அடிப்படையில்தான் அவர் தமிழகம் வரவிருக்கிறார்.  இப்படிப்பட்ட நிலையில் நாங்கள் எப்படி அவருக்கு கருப்புக்கொடி காட்ட முடியும்.  எங்களுக்கு எதிராக அவர் ஏதாவது பேசியிருந்தால் அப்போது நாங்கள் அவரை தவிர்த்து இருப்போம்.  மோடி எங்களுக்கு எந்த காலத்திலும் எதிரியாக இருந்தது இல்லை.  பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி அல்ல இந்துத்துவா தான் எதிரி என்று சொல்லியிருக்கிறார்.

 கடந்த அதிமுக ஆட்சியின்போது பிரதமர் மோடி வந்தபோதெல்லாம்  திமுகவினரும் கூட்டணி கட்சியினரும்  கறுப்புக்கொடி காட்டினார்கள்.  அது குறித்து பேசிய ஆர். எஸ். பாரதி ,  அதிமுக ஆட்சியின் போது அவருக்கு கருப்புக்கொடி காட்டி நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம் என்றால் அவர் தமிழர்களுக்கு எதிராக அப்போது செயல்பட்டார்.  அதனால் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தோம் என்கிறார்.

 அப்படி என்றால் இப்போது மோடி தமிழர்களுக்கு எதிராக செயல்படவில்லையா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.   அதற்காக அதிமுகவையும் திமுகவையும் ஒப்பிட வேண்டாம் நாங்கள் அதிமுகவினர் போல் இல்லை.  பாஜகவினர் சொன்னதற்கெல்லாம் அதிமுகவினர்.   தலையாட்டினார்கள். நாங்கள் அப்படி இல்லை நாங்கள் யாருடைய காலிலும் விழ வேண்டிய அவசியமில்லை.   திமுக தன்மானத்தோடு நடந்துகொள்கிறது என்று சொல்லியிருக்கிறார்.

 பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்த ஆர்.எஸ்.பாரதியே இப்படி அந்தர் பல்டி அடித்து இருப்பது தமிழக அரசியலில் மட்டுமல்ல திமுகவினர் இடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.    இதனால் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு திமுகவையும் ஆர்.எஸ்.பாரதியையும் போட்டு தாளித்து எடுத்து வருகின்றார்கள்.