’’மாயாவதி போட்டியிடவில்லை - பகுஜன் சமாஜ் தான் ஆளப் போகிறது’’

 
m

உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது.  தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளன .

உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகள் உள்பட மொத்தம் 5 மாநிலங்களிலும் 690 சட்டமன்ற தொகுதிகளுக்கு  தேர்தல் நடைபெற இருக்கின்றது. 

y

 உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது .   தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே பல்வேறு கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தை ஆரம்பித்திருந்தன.  இந்தநிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அனைத்து கட்சியினரும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

 இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி போட்டியிடவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்திருக்கிறது.   இதுகுறித்து அக்கட்சியின் எம்பி சந்திர மிஸ்ரா செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது  அவர் மேலும் தேர்தல் குறித்து,  சமாஜ்வாதி கட்சியிடம் 400 உறுப்பினர்களே இல்லாத நிலையில் எப்படி 400 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள்.   இந்தமுறை பாஜகவும் சமாஜ்வாதி கட்சியும் உபியை  ஆளப் போவதில்லை .  பகுஜன் சமாஜ் கட்சி தான் ஆளப் போகிறது என்று தெரிவித்தார்