அதானி, அம்பானி, டாடா, பிர்லாவை விட அதிகம் தேர்தல் நிதி கொடுத்த மார்ட்டின்

 
ம்ர்

அதிகம் தேர்தல் நிதி வழங்கியதில் அதானி, அம்பானி, டாடா, பிர்லாக்களை விடவும் பரபரப்பாக பேசப்படுகிறார் லாட்டரி அதிபர் மார்ட்டின்.  அதிகம் தேர்தல் நிதி வழங்கிய இந்திய அளவில் மார்ட்டின் பரபரப்பாக பேசப்படுகிறார்.

 2021 ஆம் ஆண்டு நடந்த  தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு தேர்தல் நிதியாக 100 கோடி ரூபாயை வழங்கியிருக்கிறார் கோவையைச் சேர்ந்த மார்ட்டின்.  அவருக்கு சொந்தமான பியூச்சர் கேமிங் , ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் மூலம் வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


 மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் மூலமாக,  தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு பெரிய நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நீதியினை பெற்று வழங்குவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள அமைப்பு  ப்ருடெண்ட் எலக்டோரல் டிரஸ்ட்.  

டெல்லியை சேர்ந்த டிரஸ்ட் இந்திய தேர்தல் ஆணையருக்கு சமர்ப்பித்துள்ள 2021 அக்டோபர் 20 தேதியிட்ட கடிதம் மூலம்  மேற்கண்ட தகவல் தெரிய வந்திருக்கிறது.

அ

ப்ருடெண்ட் எலக்டோரல் டிரஸ்ட்  இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தெரிவித்துள்ள தகவலில்,   2020- 21 ஆம் நிதியாண்டில் தேர்தல் நிதியாக 245.72 கோடி பெறப்பட்டு அதில் 209 கோடி பாஜகவுக்கு வழங்கப்பட்டது.   இந்த நிதியானது 19 பெரு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டது.  இதில் அதிகபட்ச தேர்தல் நிதியாக நூறு கோடி ரூபாயை கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் அவருக்கு சொந்தமான பியூச்சர் கேமிங் மற்றும் ஓட்டல் சர்வீசஸ் நிறுவனங்கள் மூலம் வழங்கினார் .

2021 ஆம் ஆண்டு மார்ச்சு 23ஆம் தேதி 50 கோடி ரூபாயும் 2, 4ஆம் தேதி 50 கோடி ரூபாய் மொத்தம் 100 கோடி ரூபாய் வரை அவர் பாஜகவுக்கு தேர்தல் நிதியாக வழங்கினார் என்ற தகவல் வெளிவந்திருக்கிறது.