திருமாவின் கால்களை பார்த்துவிட்டு அப்புறம் பேசுங்கள் - வீடியோ எழுப்பிய சலசலப்புக்கு விசிகவினர் விளக்கம்

 
ட்

தொடர் கன மழையினால்  சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.   வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது.  கீழ் தளங்களில் குடியிருப்போர் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.  

 இந்த நிலையில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் புகுந்துவிட்டது . அவர் வெளியே காரில் ஏறி செல்ல வேண்டும் என்பதற்காக அவருடன் இருப்பவர்கள் வரிசையாகச் நாற்காலியை வைக்க அதி ஏறி வருகிறார் திருமாவளவன்.  பின்னர் நாற்காலியின் மேல் திருமாவளவன் நின்றுகொண்டிருக்க,  அவருடன் இருப்பவர்கள் அந்த நாற்காலியை  இழுத்துக் கொண்டு செல்கிறார்கள்.


 நாற்காலியின் மேல் நிற்கும் திருமாவளவனை அப்படியே இழுத்துக் கொண்டு சென்று  கார் அருகே விடுகிறார்கள்.   கார் அருகே சென்றதும்,  நாற்காலியிலிருந்து காருக்குள் தாவிக் கொள்கிறார் திருமாவளவன்.  இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

 இது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.  இதுகுறித்து தமிழக பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி செல்வம்,   ‘’என்ன திருமாவளவன்  சார்? கூட இருக்குறவங்கள இப்படி தான்  நடத்துவீங்களா?  சமூக நீதி, சமத்துவம்னு கம்பு சுத்துறதெல்லாம் சும்மா தானா? மழை தண்ணில கால் வச்சு உங்களால நடக்க முடியாம பூர்வ குடி மக்களை அதிகாரம் பண்ணலாமா. அடங்கமறு.  அத்துமீறு! இதுக்கெல்லாம் அர்த்தம் இதுதானா?’’என்று கேட்டிருந்தார்.

இதற்கு விசிக வன்னியரசு பதில்  சொல்லி இருந்தார்.  அவர்,  ‘’வேளச்சேரியில் மருதம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் உள்ள ஓர் அறையில் தான் எமது தலைவர் கடந்த15 ஆண்டுகளாக தங்கி வருகிறார்.   கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த மழையில் எப்படி கீழ்த்தளம் முழுக்க தண்ணீர் புகுந்ததோ, அப்படி தான் இந்த ஆண்டும்.  ஒரு தலைவர் நினைத்தால் சொகுசு ஓட்டலில்கூட தங்கலாம். ஆனால் அதையெல்லாம் விடுத்து தம்பிகளோடவே தங்குகிறார்.   முழங்கால் அளவு தண்ணீரில் தலைவர் நடக்கக்கூடாது என்பதற்காக நாற்காலிகளை போட்டு உதவுகிறார்கள் தம்பிகள்.  இது கூட பொறுக்க முடியாத அரசியல் வன்மத்தர்களும் அறிவு பலவீனமானவர்களும் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள். ’’என்கிறார். 

ட்

வன்னி அரசுவின் இந்த பதிலுக்கு,  ‘’இதே வேறு கட்சியினர் செய்திருந்தால் உங்கள் வாய் என்னவெல்லாம் பேசியிருக்கும் வன்னி சார்.. மக்கள் அறிவார்கள்.
இன்னும் நான்கு வருடங்கள் என்னவெல்லாம் பார்க்க வேண்டுமோ?’’ என்று கேட்கிறார்கள் நெட்டிசன்கள்.

 திருமா கால்கள் தொடர் வீக்கத்தில் இருந்து, சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்பது VCK வின் கடைக்கோடி தொண்டனுக்கும் தெரியும் டா என்கிறார்கள் விசிகவினர்.   அதனால்தான் திருமா தண்ணீரில் கால் நனையாமல் அப்படிசென்றார் என்கிறார்கள் அவர்கள்.