சீறிய சி.வி.சண்முகம் - நவநீத கிருஷ்ணன் சீட் கிழிந்த கதை

 
cv

சி.வி. சண்முகத்தின் அழுத்தத்தினால் தான் அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் பதவியிலிருந்து நவநீதகிருஷ்ணன் எம்பி நீக்கப்பட்டார் என்ற தகவல்கள் பரவுகிறது. திமுக நமக்கு எதிரி கட்சி அந்த கட்சியுடன் எதற்கு இந்த நட்பு?  நீட் தேர்வு விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திமுக குழு சென்றபோது அந்த குழுவில் நவநீதகிருஷ்ணனின் சென்றார்.   இதனால் கட்சித் தொண்டர்கள் எல்லாம் என்னிடம் கேள்வி கேட்டு துளைத்து எடுக்கின்றார்கள் என்று அதிமுக தலைமையிடம் கோபப்பட்டு இருக்கிறார் சிவி சண்முகம்.

na

 மேலும்,   திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் இல்ல திருமண விழாவில் பங்கேற்க அறிவாலயத்திற்கு சென்றிருக்கிறார் நவநீதகிருஷ்ணன்.   அதுமட்டுமல்லாமல் ராஜ்யசபாவில் கனிமொழி தான் எனக்கு வழிகாட்டி என்று பேசியிருக்கிறார் .   இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடியது தானா?  புரட்சித்தலைவி அம்மா இருந்தால் இப்படியெல்லாம் நடந்து கொள்வாரா?   கட்சி கட்டுப்பாடில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது என்று ஆவேசப்பட்டிருக்கிறார் சிவி சண்முகம்.

 இந்த விஷயத்தை சும்மா விட்டு விட்டால் அடுத்து ஒவ்வொருவரும் இதையே செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் என்று அவர் ஆத்திரப்பட,  அதன் பின்னர்தான் கட்சித் தலைமை முடிவெடுத்து அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் பதவியிலிருந்து நவநீதகிருஷ்ணன் எம்பியை  நீக்கம் செய்துள்ளனர்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமாரும் நவநீதகிருஷ்ணன் நீக்கம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.  அதிமுகவில் இருந்துகொண்டு திமுக கட்சி அலுவலகமான அறிவாலயத்திற்கு செல்வது நாகரிகமற்ற செயல்.   அங்கு கால் வைப்பதே அவமானம் .  அப்படி இருக்கின்ற பட்சத்தில் அவர் அங்கு சென்று பேசியது ஏற்றுக்கொள்ளமுடியாதது.   இவர் மட்டுமல்ல கட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார்.