’’சீமான் மனைவிக்கு கொடைக்கானலில் இருக்கும் நிலம்..’’ -ஆதாரத்துடன் அம்பலம்

 
சே

நாட்டையே அடையத் துடிக்கிற எனக்கு இந்த மண்ணில் வீடு கிடையாது என்பது எவ்வளவு வரலாற்றுத் துயரம் என்று மிக வருத்தத்துடன் சொல்லியிருந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தனக்கு சொந்த வீடு இல்லை. வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன்.  அதுவும் அந்த வீட்டையும் காலி பண்ணச் சொல்லிவிட்டார்கள். நான் வீட்டிற்கு எங்கே போவோன் என்று சீமான் சொன்னது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

kd

அடுத்த மாதம் காலி பண்ணணும். என் பிள்ளைகளை கூட்டிக்கிட்டு எங்க போவது? நானும் என் மனைவியும்னா பராவல்ல. நாங்க பாட்டுக்கு ஒரு சின்ன குடிசையில் எங்கேயாவது இருந்திட்டு போவோம். ஆனா என் பிள்ளைகள், அந்த வாத்து, கோழிகள், புறா இதை எங்க கொண்டு போய் போடுறது? எந்த வீட்டில் கொண்டு போய் வச்சாலும் வீடு தரமாட்டான் தெரியுமா?என்று கவலையுடன் அவர் கேட்டிருந்தார்.

சீமானுக்கு வெளிநாட்டில் இருந்து நிதி வருகிறது என்று பல காலமாக பலரும் சொல்லி வரும் நிலையில், அதை மறுத்து பேசியிருக்கிறார் சீமான்.   நானே வாடகை வீட்டில் இருக்கிறேன்.  அப்புறம் எப்படி வெளிநாட்டில் இருந்து வருகிறது என்று சொல்கிறீர்கள் என்று கேட்டிருந்தார்.  எனக்கு கோடி கோடியாய் பணம் வருதுன்னு சொல்றாங்க..? வருதுன்னு சொல்லுறீங்க... அப்ப  உங்களுக்கு எங்கேயிருந்து வருதுன்னு சொல்லுங்க.  அதை பத்தி புலனாய்வு பண்ணுங்க என்று ஆத்திரடன் சொல்லி இருந்தார்.

c

கருணாநிதி ஆட்சி காலத்தில் இந்த மண்ணில் நான் போராடுகிற காலத்தில்  எந்த விடுதியிலும் எனக்கு தங்க இடம் கொடுக்க மாட்டாங்க. இப்போ எனக்கு வாழறதுக்கு வீடு இல்லை தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தி இருந்தார்.  ரயிலில் டிக்கெட் எடுக்காமல் இல்லாமல் பயணம் செய்து சென்னை வந்த கருணாநிதிக்கு எப்படி இவ்வளவு சொத்துக்கள் சேர்ந்தன என்றும் கேட்டிருந்தார்.

se

ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியை பிடித்துவிடும் கனவுகளோடு தீவிர பிரச்சாரம் செய்யும் சீமானுக்கா இந்த நிலை என்ற பேச்சு எழுந்திருக்கிறது. அதே நேரத்தில், சென்னயில் அவர் வாடகைக்கு இருக்கும் பிரமாண்ட வீட்டினை காட்டி,  இதுதான் சென்னையில் சீமான் வசிக்கும் எளீமையான வீடு என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

க்ல்

இந்த நிலையில் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர், சீமான் மனைவி கயல்விழிக்கு சொந்தமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வில்பட்டி வருவாய் கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் இருக்கிறதே.   அதை விற்று சென்னையில் சொந்தமாக வீடு வாங்கிக்கொள்ளலாமே என்று கேட்டு, கொடைக்கானலில் இருக்கும் நில ஆதாரங்களையும் வெளியிட்டிருக்கிறார்.

’’ அதிபரே, கொடைக்கானல்ல இருக்குற இந்த 6 ஏக்கர் நிலத்தை வித்து, சென்னையில வீடு வாங்கிக்கலாமே...எதுக்கு பிச்சை எடுக்குறீங்க? நல்ல விலைதான் போகுது  வித்துட்டு வீடு வாங்குங்க.   2.43 ஹெக்டேராம், அப்படியென்றால்  6 acre.  6 acre =  2, 61, 360 சதுர அடி. ஒரு சதுர அடி இன்று 115 ரூபாய் என்றால் இடத்தின் சந்தை மதிப்பு 3கோடியே 36 லட்சம்’’என்கிறார் சவுக்கு சங்கர்.

avv