போலீசுக்கு குட்டு! ஜி.ரா. மகிழ்ச்சி

 
a

நீட் தேர்வினால் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதால்  அரசை கண்டித்து  நடந்த போராட்டங்களை ஒடுக்கபோராடுவோர் மீது வழக்கு தொடரப்பட்டதால்,  இதை  எதிர்த்த வழக்கு வெற்றி பெற்றிருக்கிறது.  இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

an

கடந்த 2017 ஆம் ஆண்டில், மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி செய்தி வெளியானபோது, பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்தேன் என்று சொல்லும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்,   உடனடியாக தோழர் பாக்கியத்தை தொடர்புகொண்டேன். கட்சியின் ஏற்பாட்டில் சென்னை, தாராப்பூர் அருகில் திரளான மக்கள் பங்கேற்ற மறியல் நடந்தது. இந்த போராட்டத்திற்கு தலைமையேற்று நான்  கலந்துகொண்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.

g

அன்றைய அதிமுக அரசு, போராட்டங்களை ஒடுக்கும் நோக்கில் கடுமையான பிரிவுகளில் பொய் வழக்கு போட்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில், வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி வாதாடினார். இன்று தீர்ப்பு வெளியாகியது என்று   சொல்லும் ராமகிருஷ்ணன்,  அமலிலேயே இல்லாத சட்டப் பிரிவில் பொய்யாக வழக்கு பதிவு செய்ததற்காக போலீசை குட்டியிருப்பதுடன், ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு உள்ள உரிமையையும் தீர்ப்பு உறுதி செய்துள்ளது என்று மகிழ்ச்சி  தெரிவித்துள்ளார்.