கொங்குல இனி எவனுக்கும் பங்கு இல்ல..செந்தில்பாலாஜி தடாலடி

 
ko

கொங்கு மண்டலத்தில் அதிமுகவை அதிக இடங்களை பிடித்து இருந்தது.  ஒரு சில தொகுதிகளில் மட்டுமே திமுக புடிக்க முடிந்தது.  நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் நிலவரம் இப்படி இருந்தாலும் , அடுத்து வரும் தேர்தல்களில் கொங்கு மண்டலத்தை கைப்பற்ற திமுக முனைப்பு காட்டி வருகிறது.

 இதற்காக கொங்கு மண்டலத்தில் திமுகவின் வாக்கு வங்கி அதிகரிக்க யார் சரியான நபர் என்பதை யோசித்து கரூர் சட்டமன்ற உறுப்பினரும் , மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜியை கொங்கு மண்டல திமுக வளர்ச்சிக்காக நியமித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.   செந்தில் பாலாஜியும் கோவையில் முகாமிட்டு கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சென்று குறைதீர்ப்பு முகாம்களை நடத்தி மக்களிடம் மனுக்களைப் பெற்று வருகிறார்.   அவரை வரவேற்று செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினரும் கோவை முழுவதும் போஸ்டர் ஒட்டி இருக்கின்றனர்.

hin

 அந்த போஸ்டர் தான் இப்போது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.   கோவையில் பெரும்பாலான இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன.   அந்த போஸ்டரில் கொங்குல இனி  எவனுக்கும் பங்கில்ல என்ற வாசகம் இடம் பெற்று இருக்கிறது.   அந்த போஸ்டரில் முதலமைச்சர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்,மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் படங்கள் இடம்பெற்றுள்ளன.

கொங்கு மண்டலம் அதிமுக வசம் இருப்பது ஒரு பக்கம் இருக்க,   கொங்குமண்டலத்தினை வசப்படுத்த பாஜக முனைப்பு காட்டி வருகிறது.   கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து அது தொடர்பான சர்ச்சையும் வெடித்தது.   இந்த நிலையில் கொங்குல இனி எவனுக்கும் பங்கு இல்லை என்ற போஸ்டர்கள் பாஜகவினர் மட்டுமல்லாமல் கோவையில் உள்ள எஸ். பி. வேலுமணியையும் அதிரவைத்திருக்கிறது.