அமைச்சராக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா - சுட்டிக்காட்டும் சுதா பரமசிவன்

 
add

நயினார் நாகேந்திரன் நெல்லை வரும்போது அவருக்கு கருப்பு கொடி காட்டுவோம் என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார் சுதா பரமசிவன்.  

மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு மதமாற்ற பிரச்சாரம் தான் காரணம் என்று பாஜகவினர் குற்றம்சாட்டி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,  அதிமுக தரப்பில் இதுகுறித்து எதுவும் பேசாமல் இருந்ததால்,  அதிமுக எதிர்க் கட்சியாக இல்லை.  பாஜக எதிர்க்கட்சியாக இல்லாமல் இருந்தாலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே. சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுகவை பார்க்கமுடியவில்லை.   நாலு பேர் இருந்தாலும் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனையை பாஜக தான் பேசுகிறது  என்று நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்திருந்தார்.

n

 இதனால் அதிமுகவினர் கொதித்தெழுந்து நயினார் நாகேந்திரனுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.   தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  எடப்பாடி பழனிச்சாமி இடம் பேசி தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டதாக செய்திகள் வெளியான.   ஆனாலும் அதிமுகவினரின் தங்களது கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

 இந்நிலையில் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசியபோது,  நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்தார்.   அவர் ,   அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் பேச்சு வருந்தத்தக்கது.   நெல்லையில் பாஜகவே இல்லை.  அப்படி இருந்தும் நெல்லை சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவிலிருந்து வேட்பாளரை அறிவித்த போது ஒரு பைசா கூட வாங்காமல் அவருக்காக தேர்தல் பணி செய்தோம்.  அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த காரணத்தினால்தான் 4 சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக பெற முடிந்திருக்கிறது.  அதிமுக கூட்டணி இல்லாமல் பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்பதையும் அவர் உறுதியாக சொல்லியிருக்கிறார்.

 அதிமுக விமர்சனம் செய்ய நயினார் நாகேந்திரனுக்கு தகுதி இல்லை என்றால் தொடர்ந்து பேசிய சுதா பரமசிவன் அதிமுக வை விமர்சனம் செய்ததால் நயினார் நாகேந்திரன் வெளிவரும்போது அதிமுகவினர் அவருக்கு கருப்பு கொடி காட்டுவோம் என்று ஆவேசத்துடன் தெரிவித்திருக்கிறார்.

 வளர்த்துவிட்ட இயக்கத்தை பற்றி பேசுபவர்கள் நன்றாகவே இருக்க மாட்டார்கள்.    திமுகவில் இருந்தபோது நயினார் நாகேந்திரனை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா.  அவரை உருவாக்கியது அதிமுக என்பதை மறந்து விடக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.