ஒரு கூட்டு கிளியாக.. ஒரு தோப்பு குயிலாக.. ஓபிஎஸ்-இபிஎஸ்க்கு படிக்காதவன் பாட்டு

 
ஒப்

 ஜெயலலிதா இருந்தபோது போயஸ் கார்டனில் மிகுந்த அதிகாரத்தில் இருந்தவர் பூங்குன்றன்.    அமைச்சர்களே பூங்குன்றன் வழியாகத்தான் ஜெயலலிதாவை சந்திக்க முடியும் பேச முடியும் என்ற நிலை இருந்தது.   ஆனால் ஜெயலிதாவின் மறைவுக்குப் பின்னர் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிப்போனது .

அரசியலிலும் கட்சியிலும் முக்கிய பதவி கிடைக்காததால் அவர் தனது கிராமத்திலிருந்து விவசாயப் பணிகளையும் ஆன்மீகப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார் பூங்குன்றன்.  அவ்வப்போது அவர் அதிமுக குறித்தும் அரசியல் நிலவரங்கள் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

சி

 அதிமுகவில் தங்கள் மனக் கசப்புகளை மறந்து ஒன்று படவேண்டும்.    ஒன்று பட்டால் தான் வெற்றி பெறும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.  இந்நிலையில் அதிமுக உட்கட்சித் தேர்தலில் ஓ .பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும்,  எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பூங்குன்றன்,  ரஜினிகாந்த்- சிவாஜி கணேசன் நடித்த படிக்காதவன் படத்தில் இருந்து ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடலின் வரிகளை சொல்லி இருக்கிறார்.

ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு.
என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள்

ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு.

எ

செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்

செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்

சத்தியதை நீங்கள் காத்திருந்தால்
சத்தியம் உங்களை காத்திருக்கும்
தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும்
பூ மாலை காத்திருக்கும்

பொ

ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு

நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா
வெள்ளை இளஞ்சிட்டுக்கள், வெற்றி கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள், விண்ணை தொடுங்கள்

நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா
வெள்ளை இளஞ்சிட்டுக்கள், வெற்றி கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள், விண்ணை தொடுங்கள்

பேருக்கு வாழ்வது வாழ்கை இல்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை
ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன்
என் கண்ணில் ஈரமில்லை

ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு
என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள்
என்ற பாடலில் இருந்து ,

ஜ்

’’சத்தியத்தை நீ காத்திருந்தால்
சத்தியம் உங்களை காத்திருக்கும்
பேருக்கு வாழ்வது
வாழ்க்கை இல்லை
ஊருக்கு வாழ்வதில்
தோல்வி இல்லை
நேர்மை அது மாறாமல்
தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள்..!’’ என்ற வரிகளை ஓபிஎஸ் -இபிஎஸ் இருவருக்கும் சொல்லி இருக்கிறார்.