ஜெ., எடுத்த முடிவில் ஸ்டாலின் - ஆடிப்போன டெல்லி

 
sa

 மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்பிக்கள் குழு சந்திக்க பலமுறை முயற்சித்தும் முடியாததால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது . இந்நிலையில் முதல்வர் மு..க ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவால் தமிழக எம்பிக்கள் குழுவை சந்திக்க அமித்ஷா ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

j

தமிழக சட்டமன்றத்தில் கடந்த 13ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்ட நீட் விலக்க சட்டமசோதா தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  ஆனால் இன்று வரைக்கும் அந்த மசோதா ஆளுநர் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்ப படாமலேயே இருக்கிறது.   இதனால் தமிழக அரசின் மூத்த அமைச்சர் துரைமுருகன் ஆளுநரை நேரில் சந்தித்து கடந்த 17ஆம் தேதியன்று இந்த விவகாரம் குறித்து வலியுறுத்தினார்.  அதன் பின்னரும் ஆளுநரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

 இதனால் தமிழக எம்பிக்கள் குழு இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் உளவுத்துறை அமைச்சரை சந்தித்து முறையிடுவதற்காக முயற்சித்தனர்.  ஆனால் கொரோனா கட்டுப்பாடு காரணங்களால் குடியரசுத் தலைவரை சந்திக்க முடியாமல் போனது.  அதனால் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அவரது செயலாளரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து விட்டு வந்தனர்.  அதன்பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க பலமுறை முயன்றும் தமிழக எம்பிக்களுக்கு  அமித்ஷா அனுமதி வழங்கவில்லை.  இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

sd

 இதுகுறித்து தமிழக எம்பிக்கள் திமுக எம்பிக்கள் தங்கள் கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலினிடம் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்கள்.  அமித்ஷா தங்களை சந்திக்க மறுத்தது  திமுகவுக்கு இமேஜ் குறைவை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்லி,  இதற்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்றும் அவர்கள் ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள்.

வரும் ஜனவரி 26ம் தேதி அன்று குடியரசுதின அன்று கொடியேற்ற ஆளுநரை அழைக்காமல், முதல்வர் நீங்களே கொடியேற்றுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். ஸ்டாலின் இதில் கொஞ்சம் யோசிக்க,   மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது 91-96 ஆட்சிகாலத்தில் ஆளுநராக இருந்தவர் சென்னாரெட்டி.  அவரை குடியரசு தினத்துக்கு அழைக்காமலேயே தானே முதல்வராக இருந்து கூடிய ஏற்றிருக்கிறார்.  அதேபோல கடந்த 2017ஆம் ஆண்டு குடியரசு தினத்தின் போதும் அப்போது  பொறுப்பு ஆளுநராக இருந்தவர் வித்யாசாகர் ராவ்.   மகாராஷ்டிரா மாநிலத்தில் முழு நேர ஆளுநராக இருந்தார் அவர். அதனால்  மும்பைக்கு கொடியேற்ற சென்றுவிட்டதால் இங்கே வர முடியவில்லை.  அதனால் அப்போது முதல்வராக இருந்த ஓ .பன்னீர்செல்வம் கொடியேற்றினார் .

am

ஆளுநருடன் ஏற்பட்ட தனிப்பட்ட மோதல் போக்கினால் ஆளுநரை அழைக்காமல் ஜெயலலிதா கொடி ஏற்றினார்.  வித்யாசாகர் வர முடியாததால் ஓ. பன்னீர்செல்வம் கொடியேற்றினார்.  ஆனால் நாம் இப்போது அப்படி செய்ய வேண்டும்.  தமிழ்நாட்டின் உரிமைக்காக நாம் இதைச் செய்யலாம் .  ஆளுநரை அழைக்காமல் நீங்களே வெளியேற்றுங்கள் என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள்.  இதற்கு முதல்வர் சம்மதித்து இருப்பதாக தகவல் .

இந்த விவகாரம் உளவுத்துறை மூலமாக மத்திய அரசுக்கு சென்றிருக்கிறது.   இதையடுத்து பிரதமர் மோடி அமித்ஷாவை அழைத்து இந்த விவரத்தை சொல்லி தமிழக மக்களை சந்திக்க அறிவுறுத்தி இருக்கிறார்.   இதையடுத்து வரும் 15ஆம் தேதி அமித்ஷாவும் தமிழக எம்பி களை சந்திக்க இருப்பதாக தகவல்.