அது செல்லூர் ராஜூ குரல்தான் - குரல் பரிசோதனைக்கு தயாரா? சவால் விடும் சக்தி

 
c

அந்த ஆடியோவில் உள்ளது என் குரல் என்று செல்லூர் ராஜூ மறுத்தாலும் அது அவர் குரல்தன் என்று அடித்துச்சொல்கிறார் சக்திவேல் ராஜன்.

 சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் மதுரை மாவட்ட அதிமுக பிரமுகருமான செல்லூர் ராஜூ பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.   மதுரை வில்லாபுரத்தைச்சேர்ந்த  சக்திவேல் ராஜன் என்பவர் குவைத்திலிருந்து செல்லூர் ராஜுக்கு அலைபேசியில் பேசியதாகவும்,  பதிலுக்கு செல்லூர் ராஜு பேசியது போல் அந்த ஆடியோ இருக்கிறது.

 அந்த ஆடியோவில் சக்திவேல்,  அம்மாவுக்கு அடுத்தபடியாக கட்சியில சின்னம்மா தானே இருந்தாங்க.   உங்களைப் போன்ற சீனியர்கள் எல்லாம் இதை எடுத்துச் சொல்ல வேண்டாமா என்று கேட்க,   நாங்களும் அதைத்தான் விரும்புறோம்.   அதற்கு முறையாக போகணும் தம்பி.  இல்லை என்றால் மொத்தமாக இழந்து விட்டு போய் விடுவோம் . அவங்க கைப்பற்றி போய்டு வாங்க தம்பி.  அதற்காகத்தான் கம்முனு இருக்கிறோம்.  அதெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று செல்லூர்ராஜ் செல்வது போல் இருக்கிறது.

r

  கட்சி முழுவதும் எடப்பாடி கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அதை முறையாக போய்தான் அடித்து காலி செய்ய வேண்டும்.   அவசரப்பட்டால் கட்சி மொத்தமும் எடப்பாடி கைக்குள் போய்விடும் என்று செல்வராஜ் மனம்திறந்து சொல்லியிருப்பதாக அதிமுகவிற்குள் சலசலப்பு எழுந்திருக்க, இதை மறுத்திருக்கிறார் செல்லூர்ராஜ்.

செய்தியாளர்களிடத்தில் அவர் இதுகுறித்து பேசியபோது,  ‘’அண்ணா திமுகவினர் ஒற்றுமையாக இருப்பதை தெரிந்து கொண்ட சில சமூக விரோதிகள் வேண்டுமென்றே இப்படி செய்கிறார்கள்.   எனது குரலில் ஒருவர் பேசி அதை நான் பேசியது போல் வெளியிட்டு தேவையில்லாத சர்ச்சைகளை ஏற்படுத்துகிறார்கள். என் குரலில் இருக்கும் ஒருவரிடம் பேசியது போல் அந்த ஆடியோவில் இருக்கிறது.  அதுவும் இரவு ஒரு மணிக்கு பேசியது போல் இருக்கிறது அதுவே முதலில் தவறு.
 எங்கள் கட்சியில் வீணாக குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள்.  நகர்ப்புற தேர்தல் வரும் நேரத்தில் இது மாதிரி எல்லாம் நடைபெறுவதால் ஆளுங்கட்சியின் சதியாக கூட இருக்கலாம் என்று நினைக்கிறேன்.   இது முழுக்க முழுக்க தவறான செய்தி . அந்த ஆடியோவில் வந்திருக்கிறது என்றாலும்  அது  தவறான செய்தி.   அது என்  குரலும் அல்ல.

s

 நான் ஊடகத்தினர் இடம் தொடர்ந்து பேசி வருகிறேன் . அப்போது சசிகலா பற்றி கருத்து கேட்கும் போதெல்லாம் அது தலைமை முடிவு செய்யும்போது  என்று சொல்லிவிடுவேன்.   அப்படி இருக்கும் போது நான் எப்படி இப்படி  சொல்லுவேன்.  இப்படி தவறான ஆடியோ பரப்பியவர்கள் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிப்பேன்’’ என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சக்திவேல் ராஜன்,  செல்லூர் ராஜூ அண்ணனுக்கு இப்ப கூட தைரியம் இல்லை. நான் ஆடியோவில் பேசவில்லை என்கிறார்.  கட்சியின் ஒற்றுமையை சீர்குலைக்க என் குரலில் யாரோ பேசி இருக்கின்றனர் என்கிறார்.  குவைத் நேரப்படி காலை 11 மணிக்கும்,  இந்திய நேரப்படி மதியம் ஒன்றரை மணிக்கும் தான்  பேசினேன்.  ஆனால், இரவு ஒன்றரை மணி என்கிறர்  அண்ணன் செல்லூர் ராஜூ.  

அந்த ஆடியோவில் இருக்கும் குரல் தன்னுடையது அல்ல என்று சொல்லி அவர் போலீசுக்கு போவதாக சொல்லி இருக்கிறார்.  உடனடியாக போலீசுக்கு போகட்டும். என் மீது புகார் கொடுக்கட்டும்.  குரல் பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். அப்போது உண்மை தெரியும் என்கிறார் உறுதியாக.