குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராமை தள்ளிவைப்பது கட்சிக்கு நல்லது..

 
kus

 சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டதால் ஒவ்வொரு கட்சியும் போஸ்டர் ஒட்டுவதையும், பிட் நோட்டீஸ் கொடுப்பதையும் , சுவர் விளம்பரங்கள் செய்வதையும் குறைத்துக் கொண்டு விட்டன.

 சமூக வலைத்தளங்களில் தான் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.   இதற்கெனவே ஒவ்வொரு கட்சியும்  இணையதள குழு வைத்திருக்கின்றது.  இதில் எதிர்க்கட்சியினர் குறித்து அவதூறு பரப்ப நினைப்பவர்கள்,  அந்த செய்தியை படித்து மக்கள் உண்மை என்று நினைக்கும் வகையில் , கவனத்தை திருப்புவதற்காக பிரபல பத்திரிகைகளில், ஊடகங்களில் அந்த செய்தி வந்தது போல் சித்தரித்து பரப்பி வருகின்றனர்.

ku

 அப்படித்தான் பாஜக குறித்து,  குறிப்பாக நடிகைகளை பாஜக தள்ளிவைக்க வேண்டும் என்று தலைப்பிட்டு, யாரை தலைவராக வேண்டும் என்று அகில இந்திய தலைமைக்கு தெரியும் . காயத்ரி ரகுராம்,  குஷ்பூ,  நமீதா போன்ற நடிகைகளை பாஜக தள்ளிவைப்பது கட்சிக்கு நல்லது என்று தந்தி டிவியில் செய்தி வந்தது போல் அந்த கார்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

sr

 இதுகுறித்து தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் எஸ்.ஆர்.சேகர்,  

‘’பொய்யை பரப்பும் 
புல்லர்கள்
இப்போது
தந்தி டிவி லோகோவில்..

இந்த Cardக்கு
எவ்வளவு Fees தம்பி
உங்களுக்கு? ’’என்று கேட்டு பதிலடி கொடுத்திருக்கிறார்.