இந்த ஆட்டம் போதுமா கொழந்த?

 
சு

குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற ஒவ்வொரு மாநில அலங்கார அணிவகுப்பில் தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

d

 மத்திய அரசின் அனுமதி மறுப்பு தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.   இதையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசிடம் மறுபரிசீலனை செய்ய கேட்டிருந்தார்.  ஆனால் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டு விட்டது.   அதில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.  

 இதை அடுத்து வேலுநாச்சியார், பாரதியார்,  வஉசி ஆகியோரின் அலங்கார ஊர்தி சென்னை குடியரசு தின விழாவில் காட்சிப்படுத்தப்படும் என்று முதல் அமைச்சர் அறிவித்திருந்தார் .  அதன்படியே இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் சென்னையில் வாகன அணிவகுப்பு நடத்தப்பட்டது.   அதில் டெல்லியில் நிராகரிக்கப்பட்ட தமிழக ஊர்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

dd

 இந்த நிலையில் கோவை மாநகரம் முழுவதும் ,    இந்த ஆட்டம் போதுமா குழந்தை என்று திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர் . டெல்லியில் நிராகரிக்கப்பட்டாலும் சென்னையில் திமுக சாதித்துவிட்டது என்பதை சொல்லும் விதமாக திமுகவினர் இவ்வாறு போஸ்டர் ஒட்டியுள்ளது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.